புதுமுக இயக்குநரான ஸ்ரீகாந்த் என்பவரின் இயக்கத்தில் 'தசரா' படம் நேற்றைய தினம் வெளியாகி இருக்கின்றது. இதில் நடிகர் நானி தரணி எனும் கதாப்பாத்திரத்திலும் கீர்த்தி சுரேஷ் வெண்ணிலா எனும் கதாப்பாத்திரத்திலும் நடித்து அசத்தி இருக்கின்றனர்.
அதுமட்டுமல்லாது இவர்களோடு இணைந்து சமுத்திரக்கனி, சாய்குமார், ஜரிணா வஹாப் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும் இப்படமானது சிங்கனேரி நிலக்கரி சுரங்கத்தை சுற்றி நிகழும் கதையாக அமைந்துள்ளது.
இந்நிலையில் இப்படம் பார்த்த ரசிகர்கள் பலரும் தமது கருத்துக்களை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தனர். அதாவது ரூ. 65 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படமானது கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது.
அந்தவகையில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படம் முதல் நாளில் மட்டுமே உலகம் முழுவதும் ரூ. 33 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
Listen News!