தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக காணப்படும் இளைய தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் திரைப்படம் தான் கோட்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் சென்னை, கேரளா, பாண்டிச்சேரி என இடம் பெற்று வந்த நிலையில், தற்போது தாய்லாந்து, ரஷ்யாவில் இறுதி கட்டப்பட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அநேகமாக மிச்சம் இருக்கும் ஒரு ஷெட்யூலுடன் படப்பிடிப்பிற்கான சூட்டிங் முடிந்துவிடும் என கூறப்படுகிறது.
இந்தப் படத்தில் பிரபு தேவா, பிரசாந்த், மைக் மோகன், ஜெயராம், ஜோகி பாபு, லைலா, மீனாட்சி சௌதாரி, பிரேம்ஜி, சினேகா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பதன் காரணத்தினால் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.
கோட் படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 5 என நேற்றைய தினம் அதிகாரபூர்வமாகவே அறிவித்திருந்தது படக்குழு. அதன்படி செப்டம்பர் 5 ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோட் படம் ரிலீசாக உள்ளது என்று புதிய போஸ்டர் ஒன்றுடன் அறிவிப்பை வெளியிட்டது படக்குழு.
இந்த நிலையில், கோட் படத்தின் புதிய போஸ்டரை வைத்து ரசிகர்கள் டீகோட் செய்ய, மறுப்பக்கம் அது தொடர்பிலான புதுப்புது தகவல்களும் வெளியாகி உள்ளன.
அதன்படி விஜயின் புகைப்படம் அடங்கிய போஸ்டரில் பிப்ரவரி 16. 2000 என சீல் ஒன்று வைக்கப்பட்டது போல் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த தினத்தில் என்ன நடந்தது என்று பார்த்தால் அந்த நாளில் அமெரிக்காவின் கலிபோனியாவில் விமான விபத்தொன்று நடந்திருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், குறித்த தினத்தில் சாக்ரமெண்டோ மாதர் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, விமானத்தை இயக்கும் DC-8 ஒரு ஆட்டோமொபைல் சால்வேஜ் விபத்துக்கு உள்ளாகி, விமானத்தில் இருந்த மூன்று பணியாளர்களும் இறந்துள்ளனர். தற்போது கோட் படத்திலும் விஜய் விமானியாக நடிக்கிறார். மேலும், கிழிந்த கரன்சி நோட்டுகளுக்கும் இந்த படத்தில் கதை இருப்பதாக எதிர்பார்க்கபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!