• Sep 21 2024

குணசேகரன் வீட்டிற்கு வந்த ஆதிரை... முகத்தடி கொடுத்த நந்தினி... ஞானம், ரேணுகாவிற்குள் வெடித்த சண்டை... சூடு பிடிக்கும் 'எதிர்நீச்சல்' ப்ரோமோ வீடியோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் சீரியல்களில் அதிகம் மக்கள் விரும்பிப் பார்க்கும் சீரியல் 'எதிர்நீச்சல்'. இந்த சீரியலானது ஏனைய சீரியல்களை விடவும் ஏராளமான ரசிகர்களைக் கொண்டுள்ளது. இந்நிலையில் இந்த சீரியலினுடைய இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது.


அதில் ஆதிரையும் கரிகாலனும் குணசேகரன் வீட்டிற்கு வருகின்றனர். அப்போது ஆரத்தி தட்டு ரெடி பண்ணவில்லை எனக்கூறி குணசேகரன் வீட்டில் உள்ள பெண்களுக்கு பேசுகின்றார். பதிலுக்கு ஜனனி "நீங்க ரெடி பண்ண வேண்டியதுதானே" என்கிறார்.


மேலும் நந்தினி "கல்யாணம் முதலில் முறையாக செய்தீங்களா..? இப்போ முறையைப் பத்திப் பேசுறீங்க" எனக்கூறி முகத்தடி கொடுக்கின்றார். மறுபுறம் ஞானத்திற்கும் ரேணுகாவிற்கும் பலத்த சண்டை நடக்கின்றது.

ஒரு பொம்பிளைப் பிள்ளைக்கு என்ன சொல்லிக் கொடுக்கணும் என்று கூட உங்களுக்கு தெரியல என குணசேகரன் கத்த, அதற்கு மகள் "எனக்கு யாரும் கத்துக் கொடுக்கல, அடுத்தவங்கள எப்படி நடத்தக்கூடாது என்று உங்ககிட்ட இருந்துதான் பெரியப்பா கத்துக்கிட்டேன்" என்கிறார்.


இவ்வாறாக இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. 


Advertisement

Advertisement