• Sep 20 2024

மூத்த அண்ணன் நெஞ்சுவலியால் துடிச்சிட்டு இருக்கார்- உங்களுக்கு குடும்பத்தோட சுற்றுலாவா?- வெங்கட்டை கடுப்பாக்கும் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

சன் மியூசிக் தொலைக்காட்சியில் ஆங்கராக தனது பயணத்தை தொடங்கியவர் தான் வெங்கட். இதனைத் தொடர்ந்து ரோஜா போன்ற சீரியல்களில் சின்னச் சின்ன ரோல்களில் நடித்து வந்தார். தற்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வருகின்றார்.

மேலும் இச் சீரியலில் இவர் ஜுவா என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார். இது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. அத்தோடு இந்த சீரியலில் தற்பொழுது அண்ணன் மூர்த்திக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு ஆப்ரேஷன் செய்து வீடு திரும்பியுள்ளார். அதே போல கதிரும் வாடகைக்கு வீடு எடுத்து தனிக்குடித்தனம் சென்று விடுகின்றார். இதனால் சீரியலும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் வெங்கட் சில தினங்களுக்கு முன்பு தனது மனைவி மற்றும் மகளுடன் மாலைதீவுக்கு விடுமுறையை கழிக்கச் சென்றுள்ளார். விடுமுறை மட்டும் இல்லை அவரின் 11 ஆவது திருமண நாளும் கூட. குடும்பத்துடன் இந்த மகிழ்ச்சியான நாளை கொண்டாடிய அவர் அங்கே எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார்.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் லைக் போட்ட கையோடு கமெண்ட் செக்சனில் புகுந்து விளையாடத் தொடங்கினார். அங்கு மூர்த்தி அண்ணன் நெஞ்சுவலியால் இருக்கிறார் உங்களுக்கு மாலதீவில் பிக்னிக் கேட்குதா? எனத் தொடங்கியவர்கள் தொடர்ந்து இது தொடர்பான கமெண்ட்களை பதிவு செய்து வெங்கட்டை கலாய்த்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement