• Sep 20 2024

விக்ரம் படத்தால் பின் தள்ளப்படும் யானை திரைப்படம்- தெலுங்கில் என்ன பெயரில் வெளியாகவுள்ளது தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

முறை மாப்பிளை என்ற திரைப்படத்தின் மூலம் அருண் விஜய் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து பாண்டவர் பூமி ,மாஞ்சா வேலு போன்ற இன்னும் திரைப் படங்களில் நடித்திருந்தாலும் சில காலம் நல்ல படவாய்ப்பின்றி இருந்தார்.

குறித்த கால இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தின் மூலம் வில்லனாக ரி என்ட்ரி கொடுத்தார். இதனைத் தொடர்ந்து குற்றம் 23 ,தடம் போன்ற படங்களில் நடித்திருந்தார். இந்த திரைப்படங்கள் இவருக்கு வெற்றித் திரைப்படமாக அமைந்திருந்தது.

இந்நிலையில் இயக்குநர் ஹரியின் இயக்கத்தில் யானை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் .இத்திரைப்படம் ஜூன் மாதம் 6 திகதி வெளியாவதாக தகவல் வெளிவந்த நிலையில் தற்போது ஜூன் மாதம் 17ஆம் தேதி ஆக மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது ரிலீஸ் திகதி நெருங்கி வரும் நிலையில் பல திரையரங்குகளில் விக்ரம் திரைப்படம் ஓடிக்கொண்டிருப்பதாலும் அடுத்த மாதத்துக்கு தள்ளிவைக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் யானை படம் தெலுங்கில் "எனுகு" என்னும் பெயரில் வெளியிடப்பட உள்ளது. அந்தவகையில் தமிழிலும் தெலுங்கிலும் ஜுலை 1-ஆம் திகதி வெளியிடப்படுவதற்கான வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement