சமீபகாலமாக வெள்ளித்திரையில் நடித்து வரும் நடிகர்களைப் போல youtube போன்ற டிஜிட்டல் தளங்களில் சேனல்கள் நடத்தி வருபவர்கள் அதிகமானோர் காணப்படுவதோடு இவர்கள் இலகுவில் ரசிகர்களியே பாப்புலராகி இருக்கின்றனர்.
அந்த வகையில் பிளாக் ஷீப் என்ற சேனல் நடத்தி வரும் விக்னேஷ் காந்த் youtubeல் அதிகம் ரசிகர்களை கொண்டிருக்கிறார். அவர் மீசைய முறுக்கு, தேவ் உள்ளிட்ட பல படங்களில் காமெடியனாகவும் நடித்து இருக்கிறார்
இந்த நிலையில் இன்று RJ விக்னேஷ்காந்திற்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருக்கிறது. அதன் போட்டோ தற்போது வெளியாகி வைரல் ஆகி வருகின்றது.
மேலும் நிச்சயதார்த்தம் முடிந்திருக்கும் நிலையில் திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்து உள்ளார். இதனால் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!