பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் மெஹ்ரீன் பிர்சாதா. கடந்த 2017ம் ஆண்டு வெளியான நெஞ்சில் துணிவிருந்தால் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமனார். விஜய் தேவரகொண்டாவின் நோட்டா படம் மூலம் பிரபலமானார். பின்னர் தனுஷ் ஜோடியாக பட்டாஸ் படத்தில் நடித்தார்.
தமிழ் தவிர்த்து தெலுங்கு, பஞ்சாபி, கன்னடம், இந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார். கொழுக் மொழுக் என்று இருந்த மெஹ்ரீனை பார்த்ததுமே தமிழ் ரசிகர்களுக்கு பிடித்துவிட்டது. தமிழ் திரையுலகில் சப்பியாக இருக்கும் நடிகைகள் எல்லாம் திடீர் திடீர் என்று உடல் எடையை வெகுவாக குறைத்து ஒல்லியாகி வருகிறார்கள்.
நீங்களும் அப்படி ஒல்லியாகிவிடாதீர்கள் மெஹ்ரீன் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்தார்கள். இந்நிலையில் தான் கருப்பு நிற சேலையில் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் மெஹ்ரீன். அதை பார்த்த ரசிக்ரகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
எப்படி இருந்த மெஹ்ரீன் இப்படியாகிவிட்டாரே. வெயிட் போனது மட்டும் அல்லாமல் நிறமும் குறைந்தது போன்று இருக்கிறது. மெஹ்ரீனுக்கு என்னாச்சு, ஏன் இப்படி ஆளே மாறிவிட்டார். இதற்கு உணவு அல்ல கவலை தான் காரணமா, எதுவாக இருந்தாலும் சரியாகிவிடும் மெஹ்ரீன். உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
மெஹ்ரீன் டயட்டில் இருந்தால் அதை உடனே கைவிட்டுவிட்டு நன்றாக சாப்பிட்டு பழையபடி சப்பியாக மாறுமாறு ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். மெஹ்ரீனின் புகைப்படங்களை பார்த்த கீர்த்தி சுரேஷின் ரசிகர்கள் வேறு ஃபீல் பண்ணத் துவங்கிவிட்டார்கள்.
Listen News!