நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம் நேற்று முன்தினம் (11.01.2023) வெளியாகியுள்ளது.தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குநர் வம்சி பைடிபள்ளி 'வாரிசு' படத்தை இயக்கியுள்ளார்.
நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, கணேஷ் வெங்கட்ராமன் எனப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர்.
மேலும் இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். அத்தோடு இசையமைப்பாளர் எஸ் தமன் இசையமைத்துள்ளார். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்துள்ளார். கே எல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.
தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவான இந்த படம் தெலுங்கில் நாளை ஜனவரி மாதம் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு நேற்று முன்தினம் வெளியான தமிழ் பதிப்பு வாரிசு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நேற்று முன்தினம் அதிகாலை 4 மணி முதல் வாரிசு திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது.
இவ்வாறுஇருக்கையில் வாரிசு படத்தில் இருந்து Celebration of Varisu என்ற தலைப்பில் படத்தில் இடம்பெற்ற கொண்டாட்ட பாடல் லிரிக் வீடியோ வடிவில் வெளியாகி உள்ளது. தமன் இசையில் ஷோபி நடன அமைப்பில் நடிகர் விஜய் ஆடும் நடனமும் இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது.அத்தோடு ராஷ்மிகா, ஜெயசுதா, சரத்குமார், பிரபு, ஷாம் ஆகியோர் இந்த வீடியோவில் தோன்றியுள்ளனர்.
Amidst the #Varisu celebration, we heard you nanba 🤩
Here’s the video of #CelebrationOfVarisu 🔥
▶️ https://t.co/XJES2bW2tv#Thalapathy @actorvijay sir @directorvamshi @SVC_official @MusicThaman @iamRashmika @karthikpalanidp @Cinemainmygenes pic.twitter.com/349uu9HQWh
Listen News!