பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசன், நேற்றைய நிகழ்ச்சியில் எண்ணூர் முகத்துவாரம் பகுதியில் உள்ள ஆயில் பிரச்சனை பற்றி மக்களுக்கு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இன்றைய தினம் களத்துக்கே சென்று நேரடியாக ஆய்வு மேற்கொண்டுள்ளார் கமல்ஹாசன்.
வடசென்னை திருவொற்றியூரை அடுத்த எண்ணூர் முகத்துவாரம் பகுதியில் தொழிற்சாலை ஆயில் கழிவுகள் முகத்துவாரம் பகுதி முழுவதும் படர்ந்துள்ளது.
இதன் காரணமாக 20க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் பாதிப்படைந்த நிலையில், அங்குள்ள மீன்களும் அதிக அளவில் செத்து மிதந்துள்ளது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில், நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கமல்ஹாசன், இந்த பிரச்சனை குறித்து பேசியதோடு, எண்ணூர் ஆயில் கசிவு பிரச்சனைக்கு பின்னால் இருக்கும் விளைவுகளையும் அதற்கு ஏன் மக்கள் கவனம் செலுத்த வேண்டும் என்பது பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.
இதை தொடர்ந்து, இன்றைய தினம் குறித்த பகுதிக்கு படகில் சென்று ஆயில் படிந்த பகுதிகளை கமல்ஹாசன் பார்வையிட்டு, அங்குள்ள குறைகளையும் பாதிப்புகளையும் கேட்டு அறிந்துள்ளார் கமல்ஹாசன்.
ஆண்டவர் பிக்பாஸ் ல மட்டும் தான் அரசியல் பேசுறார் என்று புலம்பும் தற்குறிகளுக்கு...
சென்னை: எண்ணூரை சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ள எண்ணெய்க் கசிவை ஆண்டவர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.#KamalHaasan#EnnoreOilSpill#களத்தில்_மய்யம் pic.twitter.com/UtRNI3trox
Listen News!