• Sep 20 2024

ஆத்திரமடைந்த சந்தானத்தின் ரசிகர்கள்…இடையில் நிறுத்தப்பட்ட படம்…காரணம் என்ன தெரியுமா..?

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் சந்தானம். இவர் விஜய் தொலைக்காட்சியின் 'லொள்ளு சபா' என்ற நிகழ்ச்சியில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் புகழ் பெற்றார். தொடர்ந்து 2004 இல் இவர் 'மன்மதன்' என்ற படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி பின்னர் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் சந்தானம் 'என்றென்றும் புன்னகை' படத்தில் பேசிய வசனம் ஒன்று சர்ச்சைக்குள்ளாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட வசனம் அப்படத்திலிருந்து நீக்கப்பட்டது.

தனக்கென தனித்துவமான பாணியில் நகைச்சுவையாக நடிப்பதில் தனித்திறமை கொண்ட சந்தானம் தற்போது ஹீரோவாக கலக்கி வருகிறார். இந்நிலையில் தற்போது இவரது நடிப்பில் உருவாகி உள்ள படம் 'குலுகுலு'. இத் திரைப்படத்தினை இயக்குநர் ரத்னகுமார் இயக்கி உள்ளார். அத்தோடு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளமை இப்படத்திற்கு மேலும் பலம் சேர்க்கின்றது.

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இப்படத்தினை இன்று தமிழகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்துள்ளனர். மேலும் இத்திரைப்படத்தின் ஸ்பெஷல் ஷோ இன்று காலை வெளியிடப்பட்டது. இதனால் மகிழ்ச்சி அடைந்த ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்தும் பட்டாசு வெடித்தும் ஆரவாரப்பட்டனர்.

இந்நிலையில் சென்னையில் உள்ள புகழ் பெற்ற ரோகினி திரையரங்கில் தான் இத் திரைப்படத்தின் முதல் காட்சி திரையிடப்பட்டது. இருப்பினும் அங்கு ஏற்பட்ட குளறுபடி காரணமாக படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டமையால் ரசிகர்கள் குழம்பிப் போயுள்ளனர். இதற்கு காரணம் சந்தானத்தின் ரசிகர்கள் என்று கூறப்படுகின்றது. அதாவது இடையில் புகுந்த சந்தானத்தின் ரசிகர்கள் சிலர் டிக்கெட் எடுக்காமல் தியேட்டருக்குள் நுழைந்தனர். இதன் காரணமாக டிக்கெட் எடுத்தவர்களுக்கு சீட் கிடைக்காமல் போனது.

இதனால் அவஸ்தைப்பட்ட ரசிகர்கள் ஆத்திரப்பட்டு தகராறில் ஈடுபட்டனர். இதனால் நிலமையை சரிசெய்ய அங்கு வந்த போலீஸார் டிக்கெட் எடுக்காதவர்களை அப்புறப்படுத்தினர். இதன் காரணமாகவே படம் பாதியில் நிறுத்தப்பட்டது எனக் கூறப்படுகின்றது. எனினும் போலீஸாரால் இந்நிலைமை சரிசெய்யப்பட்டது. இதன் பின்னர் 'குலுகுலு' படம் மீண்டும் திரையிடப்பட்டது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement