தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியானது 5சீசன்களை வெற்றிகரமாக கடந்து விட்ட நிலையில் தற்போது இதன் 6ஆவது சீசன் ஒளிபரப்பப்பட்டு உள்ளது. அந்தவகையில் 50 நாட்களை கடந்து மிகவும் விறுவிறுப்பாக செல்லும் இந்த நிகழ்ச்சியில் 7பேர் வெளியேறி தற்போது 14 பேர் மட்டுமே உள்ளார்கள்.
நாட்கள் நகர்ந்து செல்ல செல்ல இந்நிகழ்ச்சியானது சண்டைக்கும், சச்சரவிற்கும் பஞ்சமில்லாமல் சென்று கொண்டு இருக்கின்றது. கடந்த சீசன்களைப்போல இந்த சீசனையும் கமலே தொகுத்து வழங்குகின்றார்.
அந்த வகையில் இந்த வாரத்திற்கான புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது இரண்டு அணிகளாக பிரிந்து ஒருகுழு பழங்குடி மக்களாகவும் மற்றொரு குழு ஏலியன்களாகவும் விளையாடி வருகின்றார்கள்.
இந்நிலையில் இன்றைய நாளுக்குரிய இரண்டாவது ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது. அதில் அசீமிற்கும், ஜனனிக்கும் செம சண்டை இடம்பெறுகின்றது. அதாவது ஜனனி அசீமைப் பார்த்து "லூசு மாதிரிக் கதைக்காதீங்க" எனக் கூறுகின்றார். உடனே அசீம் "லூசு கீசு என்றெல்லாம் கதைக்காதே ஜனனி" எனக் கூறுகின்றார்.
அதற்கு ஜனனி கோபப்பட்டு "கையை நீட்டிக் கதைக்காதீங்க" எனக் கூறுகின்றார். அதற்கு அசீம் "உன் வயசு என்ன என் வயசு என்ன" எனக் கேட்டுத் திட்டுகின்றார். இவ்வாறாக சண்டையுடன் வெளியாகி இருக்கின்றது இன்றைய ப்ரோமோ.
இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ..!
Listen News!