தளபதி விஜய் நடித்துள்ள 'லியோ' திரைப்படம் தற்போது உலகளவில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. எனினும் லியோ படம் தொடர்பான பல்வேறு விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் முன்வைக்கப்பட்டு தான் வருகின்றது.
இந்த நிலையில், முதல் நாள் வசூலை வாரிக் குவித்த லியோ ஆறாவது நாளில் சற்று பின்தங்கி இருக்கிறது.
அதன்படி, லியோ படத்தின் முதல் நாள் வசூல் 140 கோடி ரூபாய் இருக்குமென கணிக்கப்பட்ட நிலையில், அதிகாரப்பூர்வ வசூல் 148.5 கோடி என தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.
எனினும், இரண்டாம் நாளில் ரூ.65 கோடியை வசூலித்தது. படத்திற்கு எழுந்த எதிர்மறையான விமர்சனமே இரண்டாம் நாள் சரிவுக்கு காரணம் என்று கூறப்பட்டது.
ஆனால், அடுத்தடுத்த நாட்களில் 405 கோடி வசூல் ஈட்டிய லியோ திரைப்படம் 5வது நாளில் அதிகப்படியாக 70 கோடியை வசூலித்தது.
அதேவேளை, ஆறாவது நாளான நேற்று தமிழகத்தில் மட்டும் ரூ21.50 கோடியும், கேரளாவில் 5 கோடியும், கர்நாடகாவில் 3.50 கோடி வசூலை பெற்றுள்ளது.
அதன்படி, மொத்தமாக ஆறாவது நாள் முடிவில் 35 கோடியை தான் வசூலித்துள்ளது. அத்துடன், தயாரிப்பு நிறுவனம் முதல் நாள் வசூலை தவிர மற்ற நாட்களின் லியோ படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் விவரத்தை இதுவரை வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!