சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடரில் குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகர் மாரிமுத்து.
அத்தோடு கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற ’ஜெயிலர்’ படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் இயக்குநரும், நடிகருமான இவர் (56) மாரடைப்பால் சென்னையில் காலமானார். அதாவது இன்று காலை ‘எதிர் நீச்சல்’ சீரியல் டப்பிங் பணியில் பேசிக்கொண்டிருந்தபோது இவர் திடீரென மயக்கம் போட்டு விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் அருகில் இருந்த சூர்யா மருத்துவமனைக்கு மாரிமுத்துவைக் கொண்டு சென்றனர். அங்கு நெஞ்சு வலி காரணமாக இறந்து விட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். இவரின் திடீர் உயிரிழப்பானது பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
Listen News!