விஜய் டிவியில் ஆரம்பித்த நாளிலிருந்து விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒடீக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் வித்தியாசமான டாஸ்க்குகள் கொடுப்பதால் ஹவுஸ்மேட்ஸ் தமக்கிடையில் போட்டி போட்டு விளையாடி வருகின்றனர்.
அந்த வகையில் கடந்து வந்த பாதை என்னும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் பூர்ணிமா தன்னுடைய கதையைக் கூறுகின்றார். அதாவது,காலேஜ் முடித்ததற்கு பிறகு ஒரு ஐடி கம்பனியில் வேலைக்கு சேர்ந்தேன். அங்கு ஒரு எட்டு மாதம் வேலை செய்திட்டு இருக்கும் போது திடீர்னு என்னை வேலைல இருந்து நிறுத்திட்டாங்க.
எனக்கு என்ன பண்ணகும் என்று தெரில வீட்டுக்கும் பணம் அனுப்பனும் என்று ஒரு டிஜிட்டல் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தேன்.ஆனால் தங்குவதற்கு வீடு இல்லை, அந்த டைம்ல 11 பசங்களும் வீடு தேடிட்டு இருந்தாங்க. எனக்கு காசும் வேணும் குறைவான பட்ஜெட்ல வீடும் வேணும் என்பதால் அந்த பசஙகளுடன் ஒரே வீட்டில் தங்குவதற்கு ஓகே சொல்லிட்டேன்.
அவங்க கூட தங்கினதுக்கு பிறகு, சுத்தி இருக்கிறவங்க எல்லோரும் தப்பாக பேச ஆரம்பிச்சிட்டாங்க, ரூம்லையும் என்னால இருக்க முடில ஒரு நாள் போலீஸ் அங்க ரைடு வந்திட்டாங்க. அவங்க இந்த வீட்டில தங்காதம்மா என்று சொன்னதும் நான் வேலை பார்த்திட்டு இருந்த ஆபிஸ்லையே தங்கியிருந்தேன்.
அங்கேயும் என்னால, இருக்க முடில அதனால வீடு தேடிட்டே இருந்தேன். ஒரு மாதிரி அம்மா தங்கச்சி எல்லோரோடையும் இருக்கப் போறேன் என்று சொல்லி ஒரு வீடு எடுத்த வாடகைக்கு இருக்க ஆரம்பிச்சிட்டேன். அதுக்கு பிறகு சேனல்ஆரம்பிச்சுவீடியோ பண்ண ஆரம்பிச்சேன்.
வீடியோ எல்லாம் நல்ல ட்ரெண்டாக ஆரம்பிச்சது,அதன் மூலம் பணம் சம்பாதிச்சேன். இப்போ சொந்தமாக வீடு, கார் எல்லாமே வைச்சிருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!