• Sep 20 2024

7நாட்களைக் கடந்தும் வசூலில் பலத்த அடி வாங்கிய 'வீரன்'... கடும் அப்செட்டில் படக்குழு..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'வீரன்'. ஹிப்ஹாப் ஆதி நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ஆதிரா ராஜ் கதாநாயகியாகவும், வினய் ராய் வில்லனாகவும் நடித்துள்ளனர். 


மேலும் இவர்களுடன் இணைந்து முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளிவந்த இப்படம் வெளியாகி 7நாட்களைக் கடந்துள்ளது. 


அதுமட்டுமல்லாது வெளியான நாள் முதலே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகின்றது. இருந்தாலும் படக்குழுவினர் எதிர்பார்த்த அளவிற்கு வசூலை இப்படம் பெற்றுக் கொடுக்கவில்லை. இதனால் படக்குழுவினர் கடும் அப்செட்டில் உள்ளனராம். அந்தவகையில் 'வீரன்' படம் இதுவரை 8கோடிக்கும் மேல் வசூலித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement