தென்னிந்திய ரசிகர்களைக் கவர்ந்த ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியானது தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம், தெலுங்கு என ஏராளமான மொழிகளில் ஒளிபரப்பாகி வருகின்றது. தமிழில் பிக்பாஸ் 6 சீசன்கள் முடிந்துள்ள நிலையில்,7வது சீசன் கடந்த அக்டோபர் 1-ம் தேதி தொடங்கியது.
தமிழ் பிக்பாஸை கமல் தொகுத்து வழங்கி வருவது போல, ஹிந்தி பிக்பாஸை 17 சீசன்களாக சல்மான்கான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 17 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர் அனுராக் தோபால்,சில தினங்களுக்கு முன்பு போட்டியிலிருந்து வெளியேறினார்.
தற்போது இவர், பிக் பாஸ் வீட்டிற்குள் நடந்த கொடுமைகள் குறித்து பேட்டி அளித்துள்ளார். அதில், நான் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின் என்னை ஒரு ஓட்டலில் தங்க வைத்தார்கள். அந்த இரண்டு நாட்களும் என் போனை என்னிடம் கொடுக்கவில்லை. எனது குடும்பத்தினருடன் பேச பிக்பாஸ் நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள் அனுமதிக்கவில்லை.
நிகழ்ச்சியில் இருந்து நான் வெளியேறிய பிறகும் அவர்கள் என்னை எவ்வளவு சித்திரவதை செய்கிறார்கள்.அங்கிருந்த இரண்டு நாட்கள் எனக்குத் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணங்கள் தோன்றியது. அதே போல, நான் பிக்பாஸ் வீட்டில் இருந்த போதும் ஒட்டுமொத்த வீடும் எனக்கு எதிராக இருந்தது.
தனிமையை உணர்ந்தேன். கழிப்பறையில் பல முறை அழுது இருக்கிறேன். அந்த மோசமான நாட்களை என் வாழ்க்கையில் என்னைக்கும் நான் மறக்கவே மாட்டேன் என்று கூறியுள்ளார். அவரின் இந்த பேட்டி வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது
Listen News!