• Nov 17 2024

ப்பா… ஒரு குழந்தைக்கு தாயான பிறகும் இப்படியா..? இளைஞர்களை திணற வைக்கும் 'ராமன் தேடிய சீதை' பட நடிகை..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

மலையாள சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை நவ்யா நாயர். இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் திலீப் இற்கு ஜோடியாக நடித்து 'இஷ்டம்' என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். குடும்பப்பாங்கான முகவட்டு வாட்டசாட்டமான தேகம் என குடும்ப குத்துவிளக்காக தோன்றி ரசிகர்கள் மத்தியில் பக்கத்து வீட்டுப் பெண் என்ற ஒரு உறவை கொடுத்திருக்கின்றார்.



அதுமட்டுமல்லாது இவர் இயக்குநர் சேரன் இயக்கத்தில் வெளியான 'மாய கண்ணாடி, ராமன் தேடிய சீதை' போன்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை நவ்யா நாயர். மேலும் பல்வேறு மலையாள படங்களிலும் நடித்துள்ளார். 2010 வரை சினிமாவில் பிஸியாக இருந்தவர் அதன்பின்னர் திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகிவிட்டார்.


திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த நவ்யா நாயர் தற்போது டீவி நிகழ்ச்சிகள், நாட்டியம் என்பவற்றில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். அதுமட்டுமல்லாது சமூக வலைத்தளங்களிலும் தனது பொழுதினைக் கழித்து வருகின்றார். அதில் தனது புகைப்படங்கள், மற்றும் நடன வீடியோக்களை அடிக்கடி பதிவேற்றி வருவார்.



இந்நிலையில் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த காலத்தில் உடல் எடை சற்று கூடி குண்டாக மாறியிருந்தார் நவ்யா நாயர். ஆனால் தற்போது உடல் எடை சற்றுக் குறைந்து மறுபடியும் ஹீரோயின் போலவே காட்ச்சியளிக்கின்றார். இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இடப்பட்ட புகைப்படங்கள் மூலமாக உறுதிப்படுத்தி இருக்கின்றார். 



அந்தவகையில் இவரால் சமீபத்தில் வெளியிடப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. அதில் இவர் சேலையணிந்து ரசிகர்களின் கண்ணுக்கு விருந்தளித்திருக்கின்றார்.

Advertisement

Advertisement