தமிழ் சினிமாவில் தலை சிறந்த நடிகராகப் போற்றப்படுபவர் அஜித். இதனால் தான் இவரை ரசிகர்கள் 'தல' என செல்லமாக அழைத்து வருகின்றனர். இவருக்கு தமிழ்நாட்டில் மட்டுமன்றி உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உண்டு.
அதே போல் இவர் நடிப்பில் உருவாகும் படங்களோ ஏராளம். அந்தவகையில் அஜித் நடிப்பில் சமீபத்தில் 'துணிவு' திரைப்படம் வெளியாகி இருக்கின்றது. இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக 'ஏகே 62' என்ற படத்தில் அஜித் நடிக்கவிருக்கிறார்.
அதாவது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அதுமட்டுமல்லாது இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ளது.
இந்நிலையில் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது. ஏற்கனவே கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் அஜித்தும் ஐஸ்வர்யா ராயும் இணைந்து நடித்துள்ளனர். இருப்பினும் அந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராய் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கவில்லை.
இந்நிலையில் ஏகே 62 படத்தில் ஐஸ்வர்யா ராய் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கவுள்ள நிலையில் சில ரொமான்ஸ் காட்சிகளில் உடனடியாக மாற்றம் செய்யுமாறு கூறியுள்ளாராம் அஜித். அதாவது சமீப காலமாக அஜித் ஹீரோயின்களுடன் ரொமான்டிக் காட்சிகளில் நெருக்கமாக நடிப்பதை குறைத்து வருகிறார்.
இதன் காரணமாகவே அஜித் தான் நடிக்கும் படங்களில் காதல் காட்சிகள் மற்றும் ரொமான்டிக் காட்சிகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டாம் என கறாராக கூறி வருகிறார். இதனையே ஏகே 62 படத்திலும் கடைப்பிடிக்கும் அஜித், ஐஸ்வர்யா ராயுடன் நெருக்கமான ரொமான்ஸ் காட்சி எதுவும் இடம்பெற வேண்டாம் என கூறிவிட்டாராம். இதனால் தற்போது கதையில் சில மாற்றங்களை செய்து வருகிறாராம் விக்னேஷ் சிவன்.
Listen News!