சன் டிவியி ஒளிபரப்பான கோலங்கள் நெடுந்தொடர் மூலம் இயக்குநராக பிரபலமானவர் திருச்செல்வன். அதனையடுத்து பிற நெடுந்தொடர்களையும் இயக்கி வந்த அவர் தற்போது சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலை இயக்கிவருகிறார்.
தமிழ்நாட்டின் தற்போதைய சென்சேஷன் சீரியல் என்றால் அது எதிர்நீச்சல்தான். ஏனெனில் அதனை இளைஞர்கள் முதல் பெரியவர்கள்வரை பார்க்கிறார்கள்.இந்த சீரியலில் கரிகாலனின் அம்மா ஜான்சி ராணி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் விஜே காயத்திரி.இவர் இது தவிர அயலி என்ற வெப் சீரியலிலும் நடித்திருக்கின்றார்.
இந்த நிலையில் காயத்ரி அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருந்தார்.அதில், கல்லூரி படித்துக்கொண்டிருந்த போது நடந்த மோசமான அனுபவத்தை பகிர்ந்தார். நிகழ்ச்சி ஒன்றுக்காக வெளியூர் சென்றிருந்தேன் அப்போது, குடி போதையில் ஒருவர் என்னை பின் தொடர்ந்து ஓட்டல் ரூம் வரைக்கும் வந்து, ரேட் என்ன சொல்லு என்றார்.
நான் கல்லூரி மாணவி என்று சொல்லியும், அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் எனக்கு என்ன செய்வது என்றே தெரியாமல் சத்தம் போட்டு கத்தினேன். பின் பக்கத்து அறையில் இருந்தவர்கள் அந்த குடிகாரரை மிரட்டி அனுப்பினார்கள். இந்த மோசமான அனுபவத்தை நான் என்றைக்கும் மறக்கவே மாட்டேன் என்றார்.
Listen News!