• Sep 20 2024

இத்தனை வயசு ஆச்சு இனிமேல் கிழவியானாலும் அவருக்குத் திருமணம் நடக்காது- பிரபல நடிகையை வறுத்தெடுத்த பயில்வான் ரங்க நாதன்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராகவும் பத்திரிகையாசிரியராகவும் வலம் வருபவர் தான் பயில்வான் ரங்க நாதன். இவர் சமீபகாலமாக தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகைகள் மற்றும் நடிகர்களைப் பற்றிய ரகசியங்களைக் கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றார். அந்த வகையில் நடிகை அனுஷ்காவைப் பற்றி பேசிய விடயம் ஒன்று வைரலாகி வருகின்றது.

அதாவது தென்னிந்திய சினிமாவில் ரெண்டு என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் அனுஷ்கா. இவர் தமிழில் சிங்கம் வானம் வேட்டைக்காரன். தாண்டவம் அலெக்ஸ் பாண்டியன் பஞ்சமுகி பாகுபலி அருந்ததி எனப் பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்திருக்கின்றார்.

மேலும் இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு இஞ்சி  இடுப்பழகி என்ற  திரைப்படத்திற்காக உடல் எடையை  அதிகரித்தார் .ஆனால் அந்த படம் வெளியாகி பல ஆ ண்டுகள் ஆன நிலையிலும் அவரால் உடல் எடையை குறைக்க முடியாமல் தடுமாறி வருகிறார். அது மட்டுமில்லாமல் இவரின்  உடல்  நிலையை  காரணம் காட்டி பல பட  வாய்ப்புகளும் கிடை க்காமல்  போய்விடுகின்றது.

அத்தோடு கிட்டத்தட்ட  40 வயதாகிய, இவருக்கு எப்படியாவது திருமணம் செய்து  வைக்க வேண்டும் என்றும் அவரின்  பெற்றோர்கள்  முயற்சித்து வருகின்றார்களாம் . ஆனால் அனுஷ்காவுக்கு நாளுக்கு நாள் உடல்நிலை அதிகரித்துக்  கொண்டு தான் இருக்கிறதாம்.  அதனாலேயே இவரை யாரும்  திருமணம்  செய்ய  விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

இனியும்  அனுஷ்காவுக்கு  கல்யாணம் பண்ணுவதற்கான வாய்ப்புகள் கம்மி தான் என்றும் அவர் கிழவியானால்  கூ ட கல்யாணம் நடக்காது என்றும் பயில்வான் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதோடு இவரை அனுஷ்கா ரசிகர்கள் திட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement