• Sep 20 2024

ஜாலியா வெளியே போயிட்டு வரலாம் என்றால் கூட வரமாட்டாரு- கௌசிக் குறித்து உருக்கமான பதிவு போட்ட அபிஷேக்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல யூடியூப் தொகுப்பாளராக வலம் வருபவர் தான் கௌசிக். இவர் நேற்றைய தினம் மாரடைப்புக் காணமாக திடீரென உயிரிழந்தார்.இளம் வயதில் இவர் உயிரிழந்தது திரையுலகப் பிரபலங்களையே கடும் அதிர்ச்சிக்கு உட்படுத்தியுள்ளது.

இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் கார்த்தி உள்ளிட்ட பல பிரபலங்கள் இரண்டு நாட்கள் முன்னர் கூட அவருடன் பேசினோமே நல்லா தானே இருந்தார். ஏன் இப்படி திடீர்னு என வாழ்க்கை ஒரு நிலையானது அல்ல என்பதை பதிவிட்டு சினிமா பிரபலங்கள் தங்களின் அதிர்ச்சியை வெளிப்படுத்தினர். அத்தோடு அவரது குடும்பத்திற்கு ஆறுதலும் தெரிவித்து வருகின்றனர்.


இந்த நிலையில் பிக் பாஸ் பிரபலமும் ஓப்பன் பண்ணா யூடியூப் சேனலில் விமர்சனம் செய்து வருபவருமான அபிஷேக் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து கெளசிக் பற்றிய விஷயங்களை பதிவிட்டு வருகிறார். கெளசிக் ஓய்வின்றி உழைக்கக் கூடியவர் என அதற்கான உதாரணத்தையும் அவர் கூறியுள்ளார்.


லீவு வந்தா ஜாலியா வெளியே போயிட்டு வரலாம் வா தலன்னு கூப்பிட்டா கூட அவர் வரமாட்டாரு.. அப்படி கடுமையா உழைப்பாரு.. சின்ன படங்கள் எல்லாம் நம்மள நம்பித்தான் வருது. அதுக்காக கொஞ்சம் புரமோஷன் பண்ண அந்த படத்துக்கு வர ஆடியன்ஸ் இம்ப்ரெஸன் கூடும்னு சொல்லுவார் என கெளசிக் பற்றி அபிஷேக் ராஜா உருக்கமாக டுவீட் போட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





Advertisement

Advertisement