இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன், நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள ‘பகாசூரன்’ படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் பிப்ரவரி 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்று படக்குழு அறிவித்திருந்தது.
இந்நிலையில், ‘படம் வெற்றிகரமாக தோல்வி அடைந்து ஊத்திக்க வாழ்த்துகள்’ என்று ட்விட்டரில் ஒரு நெட்டிசன் பதிவிட, அதற்கு கடும் கோபத்துடன் மோகன் ஜி பதிலளித்துள்ளார். அந்த ட்வீட்டை ரீ ட்வீட் செய்து, “உன் குல தெய்வத்தை வேண்டி ஒரு பக்க காதை அறுத்துக்கிட்டாலும் அது நடக்காது. இது வெற்றி படமாக அமையும். Screenshot எடுத்து வச்சிக்கோ” என்று பதிவிட்டுள்ளார்.
இத்திரைப்படம் ஆன்லைன் ஆப் மூலம் நடக்கும் பாலியல் தொழிலை மையாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. இதே நாளில்தான் செல்வராகவனின் தம்பி தனுஷ் நடித்திருக்கும் ‘வாத்தி’ படமும் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
திரௌபதி மற்றும் ருத்ர தாண்டவம் போன்ற சாதிய அடிப்படையிலான படங்களை வழங்கிய இயக்குநர் மோகன் ஜி, இந்த முறை அப்பாவி பெண்களை பாலியல் தொழிலாளிகளாக மாற்றும் குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டனை வழங்கும் அற்புதமாக கதையை இயக்கிருக்கிறார்.என்றே சொல்ல வேண்டும்.
பகசுரன் வெற்றிகரமாக பிளாப் ஆகி தோல்வி அடைந்து ஊத்திக்க வாழ்த்துக்கள்...
ஊஊஊஊஊ...
😂😂😂
Listen News!