• Nov 12 2024

படிப்பு வரலைனா விட்றனும், அதை திணிக்க கூடாது" விமர்சனத்துக்கு உள்ளாகும் கமல்ஹாசன் வார்த்தைகள்! கொதித்தெழும் சாமானியர்!

sarmiya / 1 year ago

Advertisement

Listen News!

பரபரப்புக்கும் விறு விறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் நிகழ்ச்சி, தமிழில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதன் 7வது சீசன் தற்பொழுது ஒளிபரப்பாகி வருகின்றது.


அந்தவகையில் கடந்தவாரம் ஒரு டாஸ்க்கில் விசித்திரா மற்றும் வனிதா மகள் ஜோவிகாவுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.  அதில் ஜோவிகாவின் படிப்பை இழுத்து பேசிய விசித்திராவின் வாயை ஒரே வார்த்தையால் ஜோவிகா மூடியுள்ளார்.  இதனை தொடந்து  வார இறுதியில்  கமல்ஹாசன் இதனை பற்றி நேரடியாக பேசியிருந்தார் அப்போது படிப்பு வரலைனா விட்றனும், அதை திணிக்க கூடாது" என ஜோவிகாவுக்கு சார்பாக  கதைத்திருந்தார். இது மக்கள் மத்தியில் சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றது.


இது தொடர்பாக பொதுமகன் ஒருவர் அளித்த பேட்டியில் அவர் பரவாயில்ல கோடீஸ்வரன். அவருக்கு படிப்பு பெரிய விஷயமாக தெரிய வாய்ப்பில்லை. ஆனால் நாங்கெல்லாம் படிச்சா தான் வாழ முடியும். கமல் பேசுனது கடுமையா கண்டிக்க வேண்டிய விஷயம் எனவும் எங்களைப் போல சாதாரண ஏழைகளுக்கு ,நடுத்தர வர்க்கத்திற்கு படிப்புத்தான் முக்கியம். இந்தமாதிரி ஊடகத்தில் படிக்ககூடாது என சொல்வது தவறு என கூறியிருக்கின்றார். குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றது.

Advertisement

Advertisement