நடிகர் விஜய் -லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் தான் லியோ. இந்தத் திரைப்படம் வருகின்ற 19ம் தேதி மிகவும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் காஷ்மீர், சென்னை, தலக்கோணம் போன்ற இடங்களில் நடத்தப்பட்ட நிலையில், தற்போது படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது.
படத்தின் முழுமையான வடிவம் வரும் திங்கட்கிழமை உருவாகிவிடும் என்று தனது பேட்டியில் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். படத்தின் ப்ரமோஷனையொட்டி படத்தின் அடுத்தடுத்த சுவாரஸ்யங்களை அவர் தனது பேட்டிகளில் பகிர்ந்து வருகிறார். தன்னுடைய எதிர்கால ப்ராஜெக்ட்கள் குறித்தும் பேசி வருகிறார்.
இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த பிப்ரவரியில் ரிலீஸ் தேதியுடன் துவங்கியது. படத்தின் டைட்டில் டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ப்ளடி ஸ்வீட் என்ற வார்த்தை, விஜய் ரசிகர்களின் தாரக மந்திரமானது. தொடர்ந்து காஷ்மீரில் கடுமையான குளிருக்கிடையில் படம் 52 நாட்கள் படமாக்கப்பட்டது. இதன் வீடியோக்களும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது
இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் ப்ரமோஷன்களில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருகின்றார். அந்த வகையில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டிருக்கும் போது லோகேஷ் மாற்ற வேண்டிய அவசியமான குவாலிடி என்ன என்று ஆங்கர் கேட்கிறார். இதற்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ், நிறைய நோ சொல்ல கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
தனக்காக தான் சிறிது காலத்தை எடுத்துக் கொள்ளவும் விரும்புவதாக தெரிவித்துள்ளர். ஒரு படத்திற்கு டெட்லைன் வைத்துக் கொண்டு வேலை செய்வதை தவிர்க்க விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார். இதனால் கடிவாளம் கட்டியதுபோல தான் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனால் அதிகமான அழுத்தம் ஏற்படுவதாகவும் இதுபோன்ற அழுத்தங்கள் இல்லாமல் வேலை செய்ய விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
Listen News!