• Nov 17 2024

புருவத்தை லைட்டா தூக்கினா கூட ரீ டேக் சொல்லிடுவாரு- பாடாய்படுத்திய வம்சி- புலம்பித்தள்ளிய நடிகர் ஷாம்

stella / 1 year ago

Advertisement

Listen News!


நடிகர் விஜய் நடிப்பில், கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாரிசு திரைப்படம் வெளியாகி இருந்தது. இந்த திரைப்படம், ஜனவரி மாதம் 11 ஆம் தேதியன்று உலகம் முழுவதிலுமுள்ள திரை அரங்குகளில் வெளியாகி இருந்தது. வம்சி இயக்கத்தில் உருவான இப்படத்தில் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, ஜெயசுதா, பிரகாஷ் ராஜ், ஷாம், ஸ்ரீகாந்த், கணேஷ் வெங்கட்ராம், யோகிபாபு, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

தயாரிப்பாளர்கள் தில் ராஜு & ஷிரிஷின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் கீழ் தயாரித்திருந்தனர்.இப்படம்  சுமார் 200 கோடி ரூபாய்க்கு மேல் உலகளவில் இந்த படம் வசூல் செய்திருந்ததாகவும் படக்குழுவினர் தரப்பில் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில் பிரபல சேனலுக்கு வாரிசு படக்குழுவினர் பிரத்யேகமான நேர்காணல் ஒன்றை அளித்துள்ளனர். இந்த நேர்காணலில் இயக்குநர் வம்சி, நடிகர்கள் சரத்குமார், ஜெயசுதா, ஷாம், பாடலாசிரியர் விவேக் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் நடிகர் விஜய் குறித்தும், வாரிசு படத்தின் ஷூட்டிங்கில் நடந்த சுவாரஸ்யமான விஷயங்கள் குறித்தும் நிறைய தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.

அப்போது இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி வாரிசு பட செட்டில் ஸ்ட்ரிக்ட்டாக இருப்பது பற்றியும், நடிகர்களின் நடிப்பு தனக்கு பிடிக்கவில்லை என்றால் ரீ டேக் கேட்டுக் கொண்டே இருப்பார் என்றும் தெரிவித்தனர். இது பற்றி பேசிய ஷாம், "பெர்ஃபாம் பண்ணும் போது கூட அவருக்கு என்ன தேவையோ அது வரலைன்னு வைங்களேன், யாரா இருந்தாலும் ஒன் மோர் ஒன் மோர் தான்.


நானே போய் சொல்லிட்டேன் என்ன தான் கேட்கிறீங்கன்னு புரியல என்னன்னு சொல்லுங்க. அந்த தருணத்தை ஃபீல் பண்ணுங்க அப்படின்னு சொல்லுவாரு. திரும்பிப் பார்க்கிறது தான் ஷார்ட். அந்த மொமெண்ட்ட ஃபீல் பண்ணுன்னா என்ன பண்றது?" என கூறிக் கொண்டே சிரிக்கும் ஷாம், "அம்மாகிட்ட பேசுறேன், அப்பாகிட்ட பேசுறதுன்னா ஃபீல் பண்ணலாம். திரும்பி அங்க விஜய் அண்ணா வரும்போது பாத்துட்டு ஃபீல் பண்ண சொல்லுவாரு.ஆனா படம் பார்த்து நிறைய பேர் நல்லா நடிச்சு இருக்கேன்னு சொல்லும் போது, 'தேங்க்யூ வம்சி சார்' ன்னு இருந்துச்சு" என்றார்.

 அதேபோல புருவங்கள் சில நேரம் அசைந்தால் கூட ரீ டேக் போகும் படி வம்சி சொல்வது பற்றி பேசிய ஷாம், "கணேஷ் வெங்கட்ராம் ரெண்டு செட்யூல்க்கு அப்புறம் தான் வந்து ஜாயின் பண்ணாரு. டைரக்டர இம்பிரஸ் பண்றதுக்கு ஏதாவது டிப்ஸ் குடுங்க ஷாம்ன்னு என்கிட்ட கேட்டாரு. போய் உன் புருவத்தை ஷேவ் பண்ணிட்டு வான்னு சொல்லிட்டேன். புருவத்த லைட்டா தூக்கினா கூட புருவம் அசையுதுன்னு சொல்லுவாரு. நான் அத ஷேவ் பண்ணலாம்ன்னு வரை யோசிச்சேன்" என தெரிவித்தார்.





Advertisement

Advertisement