• Nov 19 2024

சசிகுமார், சமுத்திரகனிக்கு கூட கிடைக்கல... மதுரையில் சூரிக்கு கிடைத்த ராஜமரியாதை.. வைரல் போட்டோஸ்

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

1996 ஆம் ஆண்டு மதுரையில் இருந்து சென்னைக்கு தனது சினிமா கனவுகளை கையில் ஏந்தி வந்தவர் தான் நடிகர் சூரி. எனினும் ஆரம்பத்தில் இவருக்கு கிடைத்த சின்ன சின்ன கேரக்டரில் முகம் சுளிக்காமல் நடித்து வந்தார்.

இதைத்தொடர்ந்து வெண்ணிலா கபடி குழு படத்தில் வந்த பரோட்டா காமெடியில் இவருக்கான அடையாளமும் அடைமொழியும் கிடைக்கப்பெற்றது. அன்று முதல் இவர் பரோட்டா சூரி என்றே அதிகமாக அழைக்கப்பட்டார்.

இதை தொடர்ந்து தமிழ் படங்களில் நகைச்சுவை நடிகராக கலக்கி வந்த இவர், பிரபல நடிகர்களுடனும் கூட்டு சேர்ந்து காமெடியில்  கலக்கி இருந்தார். அதன்பிறகு வெற்றிமாறனின் இயக்கத்தில் இவர் நடித்த விடுதலைப் படத்தில் யாரும் எதிர்பாராத நடிப்பை வெளிப்படுத்தி அனைவரதும் பாராட்டுகளையும் பெற்றார். அதற்குப் பின் நாயகனாக இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின.


இதே ட்ராக்கில் கொட்டுக்காளி, ஏழு கடல் ஏழு மலை ஆகிய படங்களில் நடித்திருந்தார்.  இவர் நாயகனாக நடித்த கருடன் படமும் இன்றைய தினம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

சுந்தர பாண்டியன் படத்தில் சசிகுமாருக்கு நண்பனாக நடித்த சூரி, இன்று அவருக்கு நிகராக ஹீரோவாக நடித்துள்ளார். தற்போது ரசிகர்கள் மட்டுமின்றி பல பிரபலங்களின் பாராட்டுகளையும் பெற்று வருகிறார் சூரி.

இந்த நிலையில், இன்றைய தினம் திரைக்கு வந்த கருடன் படத்தின் கதாநாயகனாக காணப்படும் சூரிக்கு, கட்டவுட் வைத்து பாலபிஷேகம் செய்துள்ளார்கள் மதுரை மக்கள். தற்போது குறித்த காணொளி வைரலாகி வருகின்றது .

இதேவேளை இதே படத்தில் நடித்த சசிகுமார், சமுத்திரகனிக்கு கூட இவ்வளவு வரவேற்பு மக்களால் கிடைக்கப்படவில்லை. தற்போது சூரியை மக்கள் கொண்டாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement