90 களில் மிரட்டல் வில்லனாக வலம் வந்தவர் ஆனந்த் ராஜ். இவர் 1987-ம் ஆண்டு வெளியான 'தாய் மேல் ஆணை' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதன் பின்னர் இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். வில்லனாக நடித்து வந்த இவர் சமீபகாலமாக காமெடி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகிறார்.
ஆனந்த் ராஜ் கடந்த ஆண்டு பிரின்ஸ், கோப்ரா, இடியட், நாய் சேகர் ரிட்டன்ஸ் போன்ற படங்களில் நடித்திருந்தார். தற்பொழுதும் படவாய்ப்பினைப் பெற்று நடித்து வருகின்றார். இவர் அண்மையில் ஒரு பேட்டியளித்திருந்தார். அதில் விஜய்யின் அரசியல் வருகை குறித்தும் பேசியுள்ளார். அதாவது நடிகர் விஜய் வியாபார ரீதியாக அவர் தான் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார்.
இவர் லியோ வெற்றி விழாவில் பேசியதை நான் பார்த்தேன். சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி தான், புரட்சித் தலைவர் என்றால் அது எம்ஜிஆர் தான், நடிகர் திலகம் என்றால் அது சிவாஜி தான் என்று பேசி இருந்தார். இப்படி அவர் பேசியதற்கு முதலில் தான் அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அவர் அவர்களின் பட்டம் அவர்களிடம் இருக்க வேண்டும்.
சினிமாவில் அவர் தான் நம்பர் ஒன், பல முயற்சிகளை தாண்டி இவரை இந்த இடத்தில் அவரின் அப்பா கொண்டு வந்து இருக்கிறார். விஜய்யும் பல கஷ்டத்தை தாண்டி இந்த இடத்திற்கு வந்து இருக்கிறார். இதனால், அவர் அரசியலுக்கு வருவதும் வராததும் அவரின் சொந்த விருப்பம், ஆனால், அரசியலுக்காக அவர் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும்.
ஒரு நடிகருக்கு மக்கள் செல்வாக்கு இருக்கும் போது அவர்களின் அடுத்த கட்டம் அரசியல் தான். இதையே தான் ரஜினிகாந்த், விஜய்காந்த், கமல் என அனைவரும் செய்தார்கள். இப்படி கலைத்துறையில் இருந்தவர்கள் தான் பின் நாளில் அரசியலுக்கு சென்றார்கள். இருந்தாலும் விஜய் அரசியல் வருகை குறித்து என்னால் உடைத்துப்பேச முடியாது, இதுகுறித்து அவர் தான் முடிவு செய்ய வேண்டும் என நடிகர் ஆனந்த் ராஜ் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!