• Sep 20 2024

விஜய்,ரஜினி கூட எல்லாம் ஜோடியாக நடிக்கனும்-அப்பா சொல்லி இருக்காரு- ஓபனாக பேசிய நயன்தாராவின் ரீல் மகள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் மகளாக நடித்து பிரபல்யமானவர் தான் மானஸ்வி.நடிகர் கொட்டாச்சியின் மகளான இவர்  தர்பார்,.த்ரிஷாவின் பரமபதம், விஷாலின் எனிமி, விஜய் சேதுபதியின் மாமனிதன், ஹன்சிகாவின் மஹா, சந்தானத்தின் டிடி ரிட்டர்ன்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கின்றார்.

இந்த நிலையில் இவர் அண்மையில் ஒரு பேட்டியளித்திருந்தார். அதில் ரஜினி அங்கிளுக்கு ஹீரோயினாக நடிக்க வேண்டும். இதை அவரிடமே கூறியிருக்கிறேன். உங்களுக்கு ஹீரோயினாக நடிப்பேன் என தெரிவித்தேன்.


கமல் ஹாசன் சாருடன் சேர்ந்து நடிக்கணும். அவர்களுடன் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஆனால் அந்த ஆசை எல்லாம் நடக்கணும்.விஜய் அங்கிள், அஜித் அங்கிளுக்கு முதலில் மகளாக நடிக்க வேண்டும். அதன் பிறகு அவர்களுக்கு ஹீரோயினாக நடிக்க வேண்டும்.


என் அப்பா தான் விஜய்யுடன் சேர்ந்து நடித்த அனுபவங்களை என்னிடம் சொன்னபோது எனக்கும் அவருடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டது. மகளாக நடித்துவிட்டு அவர்களுக்கே ஹீரோயினாக நடிப்பது ஒரு சூப்பரான அனுபவம்.நான் யார், யாருக்கு எல்லாம் மகளாக நடிக்கிறேனோ அவர்களுக்கு எல்லாம் ஜோடியாக நடிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement