• Sep 20 2024

விஜய் மேடையில் கொடுத்த கிஸ் கூட காப்பியா..? எதிலிருந்து சுட்டார் தெரியுமா.. வைச்சு செய்யும் நெட்டிசன்ஸ்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு அரங்கத்தில் மிகப்பிரமாண்டமாக சமீபத்தில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். அதுமட்டுமல்லாது வழக்கம் போல விஜய் மிகவும் எளிமையாக அதே சமயத்தில் ஸ்டைலாக விழாவிற்கு வருகை தந்தார். 


இதில் விஜய் பண்ணிய அனைத்துமே ரஜினியையே காப்பி அடித்துத்தான் என ரஜினி ரசிகர்கள் பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர். அதாவது அண்ணாமலை தம்பி இங்கே ஆட வந்தேன் டா என ரஜினி ரசிகராகவே தன்னை ஆரம்ப கால திரைப்படங்களில் காட்டி வந்த விஜய் ஆடியோ லாஞ்சில் சொல்லும் குட்டி ஸ்டோரியும் ரஜினிகாந்த் தனது சினிமா நிகழ்ச்சிகளில் சொல்லும் குட்டிக் கதையில் இருந்து சுட்டது தான் என்றும் இந்த முறை வாரிசு படத்தில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரியையும் ரஜினிகாந்த் எப்பவோ சொல்லிவிட்டார் என சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் ஆதாரத்தோடு அடித்து நொறுக்கி உள்ளனர்.


மேலும் ரஞ்சிதமே பாடலில் விஜய் ஃபிளையிங் கிஸ் கொடுப்பது போல ஒரு நடன ஸ்டெப் போட்ட நிலையில், தற்போது புதுசா ஒரு கிஸ் மாட்டியிருக்கு இனிமேல் என் ரசிகர்களுக்கு இதைத்தான் கொடுக்கப் போகிறேன் என வாரிசு இசை வெளியீட்டு விழாவில் கொடுத்தார். இந்நிலையில் தற்போது அந்த கிஸ் ஸ்டைலும் ரஜினி கிட்டே இருந்து ஆட்டையை போட்டது தான் என பாடல் ஆதாரத்துடன் ரஜினி ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.


அதாவது பாபா படத்தை ரீ ரிலீஸ் செய்தது எதுக்கு உபயோகம் ஆனதோ தெரியவில்லை. ஆனால், ரஞ்சிதமே கிஸ் ஸ்டைலை அப்பவே பாபா பட பாடலில் ரஜினிகாந்த் மனிஷா கொய்ராலாவை பார்த்து பண்ணி விட்டார் என அந்த வீடியோ க்ளிப்பை ஷேர் செய்து ரஜினிகாந்த் ரசிகர்கள் சும்மா வச்சு செய்து வருகின்றனர். 

Advertisement

Advertisement