• Sep 20 2024

அனைவருக்கும் சுயமரியாதை உண்டு- பா.ரஞ்சித்தின் டுவிட்டுக்கு பதிலடி கொடுத்த உதயநிதி

stella / 1 year ago

Advertisement

Listen News!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த திரைப்படம் தான் மாமன்னன்.இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.ஒடுக்கப்பட்டவர்கள் அதிகாரத்திற்கு வந்தாலும் சாதி திமிர் உள்ளவர்கள் அடிமையாகத்தான் நடத்துவார்கள் என்பதை மாரி செல்வராஜ் இப்படத்தில் பேசி இருக்கின்றார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த உதயநிதியிடம் பா. இரஞ்சித்தின் ட்வீட் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்திருந்த அவர், "யாராக இருந்தாலும் சுய விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். எங்கு நடந்தாலும் தவறு தவறுதான். அந்த தவறை திருத்திக் கொள்ள எங்கள் தலைவர்களான பெரியார், அண்ணா, கலைஞர் எங்களை வழிநடத்தி இருக்கிறார்கள். எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலினும் அப்படிதான் வழி நடத்துகிறார்" என்றார்.


இதற்கிடையே நேற்று பா.இரஞ்சித்திற்கு ட்விட்டரில் பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், " மாமன்னன் திரைப்படத்தைப் பாராட்டிய இயக்குநர் சகோதரர் பா.இரஞ்சித் அவர்களுக்கு நன்றி. சாதிய அடக்குமுறைகளும் - ஏற்றத்தாழ்வும் கழகம் மட்டுமல்ல, எந்த கட்சிக்குள் இருந்தாலும் அது அறவே ஒழிக்கப்பட வேண்டும். அனைவருக்குமான சுயமரியாதையை உறுதி செய்ய, தொடர் பரப்புரை செய்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது கழகம். ஆட்சி பொறுப்பேற்கும் போதெல்லாம் சட்டங்களாகவும் திட்டங்களாகவும் சமூகநீதி'யை அரியணை ஏற்றி, அரசியல் தளத்தில் தொடர்ந்து போராடி வருகிறது கழக அரசு.

 அண்ணா-கலைஞர் வழியில் எங்கள் கழகத் தலைவர் அவர்களும் இப்பணியைத் தொடர்கிறார். பராசக்தி'யில் தொடங்கி மாமன்னன்' வரை கலைவடிவங்களிலும் சமூகநீதி'யைத் தொடர்ந்து உயர்த்திப் பிடித்து வருகிறோம். ஆயிரமாயிரம் ஆண்டு கால சனாதனத்திற்கு எதிராக, சமத்துவம் காண போராடும் நூறாண்டுகால போராட்டம் இது. 


இன்னும் முழுமை பெறாத போராட்டமும்கூட. ஒரே திரைப்படத்தின் மூலம் சமூகத்தில் தலைகீழ் மாற்றத்தை நிகழ்த்திவிட முடியாது என்பதையும் நாம் அனைவரும் அறிவோம். பெரியார்-அம்பேத்கர் வழியில் மக்களுடன் தொடர்ந்து உரையாடி இம்மாற்றத்தை நிகழ்த்த முடியும். அதைநோக்கி நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்போம். இப்பயணத்தில் கழகம் மீதும் என் மீதும் இப்போது நம்பிக்கை கொண்டிருக்கும் சகோதரர் இரஞ்சித் அவர்களுக்கு நன்றி" என தெரிவித்திருந்தார்.


Advertisement

Advertisement