• Nov 17 2024

சினிமாவில் இருக்கும் எல்லோரும் கண்டிப்பாக இதை கற்றுக் கொள்ள வேண்டும்- வெற்றிமாறன் கொடுத்த அட்வைஸ்ட்

stella / 1 year ago

Advertisement

Listen News!

கடந்த 2007 ஆம் ஆண்டு, தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் பொல்லாதவன். 2007 ஆம் ஆண்டு நவம்பர் தீபாவளிக்கு ரிலீஸ் ஆனது.இந்த படத்தில் திவ்யா, டேனியல் பாலாஜி, கிஷோர், சந்தானம், கருணாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். ஜி.வி. பிரகாஷ் குமார் பின்னணி இசையில் ஒளிப்பதிவாளர் வேல் ராஜ் ஒளிப்பதிவில் இந்த படம் உருவானது.


 ஃபைவ் ஸ்டார் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் கதிரேசன் இந்த படத்தை தயாரித்திருந்தது.சமீபத்தில் இந்த படத்தின் 15வது ஆண்டு விழா சென்னையில் கொண்டாடப்பட்டது. இதில் நடிகர் தனுஷ், இயக்குநர் வெற்றிமாறன், நடிகை திவ்யா, இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார், தயாரிப்பாளர் கதிரேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் இயக்குநர் வெற்றிமாறன் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை நடத்திய மாபெரும் தமிழ்க் கனவு என்ற நிகழ்ச்சியில் முதல் தலைமுறை சினிமா என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.அப்போது பேசிய வெற்றிமாறன், "சினிமாவில் இருக்கும் போது முக்கியமாக கத்துக்க வேண்டியது பொறுமை. 2003 ஆகஸ்ட் மாதம் தனுஷ்கிட்ட ஒரு கதை சொன்னேன். 


 உடனே படம் பண்ணலாம் சார் அப்படினு சொன்னார்.ஆனால் அந்த படம் ரிலீஸ் ஆனது 2007 நவம்பர்ல தான். அப்போ அந்த 3-4 வருசம் சும்மா பொறுமையா உட்காருவது இருக்குல. சும்மா இருக்கும் போது பதட்டத்தில் நிறைய தப்பு பண்ணுவோம். நம்மளே நம்மை தூக்கி நிறுத்தனும். காப்பாத்திகனும். முதல் தலைமுறை நபர்கள் எந்த துறைக்கு சென்றாலும் இதெல்லாம் எதிர்கொள்ளும் சிக்கல்கள். நம்மளை நாமே கண்டு பிடிப்பது தான் இதில் இருக்குற அழகு." என வெற்றிமாறன் பேசினார்.

Advertisement

Advertisement