• Nov 19 2024

எனக்கும், தனுஷுக்குமான கெமிஸ்ட்ரி எல்லோருக்கும் பிடிச்சிருக்கு: பிரபல நடிகை கூறிய அந்த தகவல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நானே வருவேன் படத்தில் தனுஷின் மனைவியாக நடித்தது பற்றி பேசியிருக்கிறார் பாலிவுட் நடிகையான எல்லி அவ்ரம்.

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் நானே வருவேன் படம் செப்டம்பர் 29ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது. மேலும்அந்த படத்தில் தனுஷின் மனைவியாக நடித்துள்ளார் பாலிவுட் நடிகை எல்லி அவ்ரம். மனைவி கதாபாத்திரத்தில் எல்லி நடித்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

நானே வருவேன் பற்றி எல்லி அவ்ரம் கூறியதாவது, ரிலீஸுக்கு முன்பே மிகவும் பிரபலமாக இருக்கும் படத்தில் நடித்ததில் மகிழ்ச்சி. அத்தோடு டீஸருக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. என் கதாபாத்திரம் பற்றி மேலும் விபரம் வெளியிட விரும்புகிறேன். எனக்கும், தனுஷுக்கும் இடையேயான கெமிஸ்ட்ரியை ரசிகர்கள் கொண்டாடுவதில் சந்தோஷம் என குறிப்பிட்டுள்ளார்.

எல்லி அவ்ரம், தனுஷை சேர்த்துப் பார்க்கும்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நினைவுக்கு வருகிறார். மேலும் ஒரு ஜாடையில் ஐஸ்வர்யா போன்றே இருக்கிறார் எல்லி. ஒரு வேளை இது ஐஸ்வர்யா, தனுஷின் கதையாக இருக்குமோ என்று கூடத் தோன்றுகிறது என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.


நானே வருவேன் படம் ரூ. 35 கோடி செலவில் எடுக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறுஇருக்கையில்  அதன் டிஜிட்டல் உரிமம் ரூ. 25 கோடிக்கும், சாட்டிலைட் உரிமம் ரூ. 18 கோடிக்கும் போயிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அப்படிப் பார்த்தால் நானே வருவேன் படத்தை தயாரித்தவர் ஏற்கனவே லாபம் பார்த்துவிட்டார்.

Advertisement

Advertisement