சன் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் எதிர் நீச்சல். இந்த சீரியலில் குணசேகரன் என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றவர் தான் நடிகர் மாரிமுத்து.இந்த சீரியலில் இவர் பேசும் வசனமான இந்தம்மா ஏய்... சமூகவலைத்தளத்தில் மிகப்பெரிய அளவில் டிரெண்டானது.
இந்த சீரியலால் தொடர்ந்து படவாய்ப்புக்களும் இவருக்கு குவிய ஆரம்பித்தன. அதன்படி ரஜினிகாந்த் நடிப்பில் இறுதியாக வெளியாகிய ஜெயிலர் படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் எதிர் நீச்சல் சீரியலுக்காக டப்பிங் பேசிய போது மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, அவர் தனது காரிலேயே மருத்துவமனைக்கு சென்றார்.
மருத்துவர்கள் சிகிச்சை அளித்துக்கொண்டு இருக்கும் போதே, சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். அவரது மரணத்திற்கு நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்திருந்தனர்.அவரது உடலானது சென்னையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு சென்னையில் இருந்து அவருடையை சொந்த ஊரான தேனி மாவட்டம் வருசநாடு அருகே உள்ள பசுமலை தேரி கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி சடங்கு செய்யப்பட்டது.
மாரிமுத்து கடைசியாக ஜீ தமிழ் தொலைக்காட்சி தமிழா தமிழா நிகழ்ச்சியில் ஜோதிடர்களிடையே வாக்குவாதம் செய்திருந்தார். அதில், நான் பத்தாவது படிக்கும் போதே ஜாதகத்தை கிழித்துப் போட்டேன், கடவுள் மீது நம்பிக்கை இல்லை என்று பேசி இருந்தார். மாரிமுத்து சாமி இல்ல என்று பேசியதால் தான் இறந்துவிட்டதாக செய்தி பரவியது.
இந்நிலையில்,மாரிமுத்துவிற்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய மாரிமுத்துவின் மகன் அகிலன், அப்பா சாமி இல்லை என்று சொன்னதால் தான் இறந்துவிட்டதாக சொல்வதை கேட்கும் போது, இது முட்டாள் தனத்தின் உச்சம் என்றுதான் தோன்றுகிறது. அப்பா சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் உண்மை, அதை திரும்ப பெறமாட்டேன். இதனால் தான் நடந்துச்சு என்றால் அது தொடர்பான விவாதத்திற்கு போகவும் நான் தயாராக இருக்கிறேன் என்று மாரிமுத்து மகன் அகிலன் கூறினார்.
Listen News!