• Nov 10 2024

எல்லாமே பேசியாச்சு.. இனி சிக்கல் இல்லை.. வாரிசு திரைப்படம் வெளியாகும்..குஷியில் ரசிகர்கள்

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். மேலும் இவர் தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். 


மேலும் இவர் தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். 


இவர் தற்போது தமிழ்த் திரைப்படத் துறையில் முதன்மை நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார். மேலும் விஜயின் ரசிகர்கள் அவரை "தளபதி" என்று அழைக்கிறார்கள்.


மேலும் முக்கிய பண்டிகை நாட்களில் நேரடி தெலுங்கு திரைப்படங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை அறிக்கை வெளியிட்டிருந்தது.  இதன் காரணமாக விஜய் நடித்திருக்கும் வாரிசு திரைப்படத்திற்கு ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் சிக்கல் ஏற்படும் என கூறப்பட்டது.


இதையடுத்து சீமான், இயக்குனர்கள்,  தயாரிப்பாளர்கள் என பலரும் அந்த முடிவுக்கு கண்டனம் தெரிவித்தனர். 


இந்நிலையில் நேற்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் தேனாண்டாள் முரளி, சென்னையில் இயங்கி வரும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் நிர்வாகிகளிடம் இது தொடர்பாக பேசியுள்ளார்.


அப்போது தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை நிர்வாகிகள், தெலுங்கு தயாரிப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அதற்கு அவர்கள் தங்களுடைய மாநிலத்தில் வாரிசு திரைப்படத்திற்கு எந்த சிக்கலும் இருக்காது என உறுதி அளித்துள்ளனர் எனவும் கூறியுள்ளனர்.

Advertisement

Advertisement