• Sep 20 2024

அஜித் சேருடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி- விக்கியின் பழைய பதிவை கிண்டலடித்து வரும் ரசிகர்கள்-அடப்பாவமே

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணைந்த  'துணிவு' படம் பொங்கலை முன்னிட்டு கடந்த (11.01.2023)  அன்று  திரையரங்குகளில் வெளியானது.ரசிகர்கள் மத்தியில் முதல் காட்சியில் இருந்தே படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தமிழகம் மட்டுமின்றி உலகளவில்  'துணிவு' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று 25 நாட்களை கடந்து ஓடி வருகிறது.

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி ரிலீஸ் செய்தது.மேலும் இந்த படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியது.துணிவு படத்தின் இமாலய வெற்றியை  அடுத்து நடிகர் அஜித்தின் அடுத்த 62 வது படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக சில மாதங்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது.


இசையமைப்பாளர் அனிருத் இசையில், லைக்கா சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகும் என அறிவிக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்பொழுது ஏகே62 திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவில்லையாம். அவருக்குப் பதிலாக மகிழ் திருமேனி அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டு வரும் நிலையில் வரும் பிப்ரவரி ஏழாம் தேதி இந்த படம் குறித்த முக்கியமான விஷயம் ஒன்று நடைபெற உள்ளது.

இதனால் விக்னேஷ் சிவன் கடும் சோகத்தில் இருக்கின்றாராம். இப்படியான ஒரு நிலையில் விக்னேஷ் சிவன் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தன்னுடைய வாழ்க்கையில் இந்த வருடன் இரண்டு மகிழ்ச்சிகரணமான விடயங்கள் நடந்திருக்கின்றது. ஒன்று லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை மனைவியாக்கி குடும்ப வாழ்க்கையில் இணைந்தது மகிழ்ச்சியாக இருக்கின்றது என்று கூறினார். 


அதே போல இந்த வரும் அஜித் சேருடன் இணைந்த பணியாற்ற போகின்றேன்.இந்த பெரிய வாய்ப்பினைத் தந்தமைக்காக அஜித்சேர் மற்றும் லைக்கா நிறுவனத்திற்கு நன்றி.இந்தப் படத்திற்காக நான் கடுமையாக முயற்சி செய்வேன் என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.இந்த நிலையில் இப்போது அவர் போட்ட அந்த பதிவை ரசிகர்கள் வைரலாக்கி என்ன அஜித் சேர் இப்படிப்பண்ணீட்டீங்களே எனக் கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement