விஜய் டிவியில் ஹிட் ஆக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ஒரு சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியிலில் நடித்து வரும் கோபிக்கு ராதிகாவை விவாகரத்து செய்ய நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், பாக்கியாவிடம் கெஞ்சியபடி காபி கேட்டு பரிதாபமாக காணப்படுகின்றார்.
இந்நிலையில் இந்த வார ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் பாக்கியா, செழியன், இனியா, அமிர்தா என ஒட்டு மொத்த குடும்பமும் அமர்ந்திருந்து சிரித்துப் பேசுகின்றனர். அந்த நேரத்தில் அங்கு வந்த கோபி "என்ன ஜோக் என்று சொன்னால் நானும் சேர்ந்து சிரிப்பேன்" எனக் கூறிக் கொண்டு பாக்கியாவிற்கு அருகில் அமர்கின்றார்.
அப்போது எழில் ராதிகா வருவதாக கோபியிடம் கூறுகின்றார். அதற்கு உடனே பதறி அடித்து எழும்பிய கோபி "நான் காப்பி குடிக்கல, நான் ஒண்ணுமே பண்ணல, சும்மா உட்கார்ந்து இருக்கேன்" எனக் கூறுகின்றார். அதனைக் கேட்டதும் பாக்கியா உட்பட அனைவரும் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர்.
இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது.
Listen News!