• Sep 21 2024

விஜய் மகன் பெயரில் Fake ID..ரசிகர்களிடம் சிக்கிய ப்ளூ சட்டை மாறன்-நடந்தது என்ன..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் அவ்வளவிற்கு வெற்றிப்படத்தை கொடுக்காட்டியும் தற்போது அடுத்தடுத்தாய் வெற்றிப்படத்தை கொடுக்கின்றார் நடிகர் விஜய்.தனக்கான வித்தியாசமான நடிப்பிலும் தனது டான்ஸ் மூலமும் ரசிகர் பட்டாளத்தை தன்வசம் வைத்துள்ளார்.

விஜய்யின் 66வது படம் தான் வாரிசு.இப்படத்தை பிரபல தெலுங்குப்பட இயக்குநர் வம்சி இயக்குகின்றார். பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்து வருகிறார். விஜய் படங்களுக்கே உரிய ஆக்ஷன், காமெடியுடன் குடும்ப சென்டிமெண்டை பிரதானமாக வைத்து இந்தப் படம் உருவாகி வருகின்றது.

பொங்கல் ரிலீசை மையமாக வைத்து இந்தப் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் இந்தப் படத்தின் சூட்டிங் நடந்து முடிந்துள்ள நிலையில், தற்போது விசாகப்பட்டினத்தில் சூட்டிங் நடைபெற்று வருகின்றது.மேலும்  இந்தப் படத்தின் சீன்கள் ஏறக்குறைய நிறைவடைந்துள்ளன.



தற்போது பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்தோடு இந்தப் படம் சூட்டிங் துவங்கப்பட்டதில் இருந்தே பெரிய பிரச்சினையை சந்தித்து வருகின்றது. படத்தின் காட்சிகள் பல அடுத்தடுத்து லீக்காகி அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகின்றது.

இதனால் விஜய் ரசிகர்கள் கடும் கோபத்தில் இருந்து தயாரிப்பு நிறுவனத்திடம் பாதுகாப்பாக ஷூட் எடுங்கள் என்று கூறி வருகிறார்கள். இதற்கு நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தன் பங்கிற்கு யாரும் வாரிசு படத்தின் லீக் புகைப்படங்களை பகிர வேண்டாம் என்று பகிர்ந்துள்ளார் என்று யூடியூப் விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் இணையத்தில் பகிர்ந்துள்ளார்.



இதை பார்த்த நெட்டிசன்கள் விஜய் மகன் பெயரில் இருக்கும் டிவிட்டர் கணக்கு போலியானது என்றும் நீங்கள் இதை பேச வேண்டாமென்றும் கூறி கலாய்த்து வருகிறார்கள்.





Advertisement

Advertisement