தமிழில் இருந்து இன்று உலகிற்கே அறிமுகம் தேவையில்லா ஒரு ஆளுமை தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.தொடர் வெற்றிகளை காணும் அவர் திரைப்படங்களும் அவரை ஓய்விற்கு அனுமதிக்கா அவர் ரசிகர் படையும் அவரை வெற்றிநாயகனாகவே உறுதி செய்கிறது.
கடந்த ஆண்டு வெளியான ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு ஞானவேல் இயக்கும் திரைப்படமான வேட்டையனில் நடித்தார் ரஜினிகாந்த்.இந்த திரைப்படத்தின் படிப்பிடிப்பு கடந்த 13-ந் தேதி நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ரஜினிகாந்த் ஓய்வுக்காக கடந்த வாரமளவில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபிக்கு சென்றார்.
இந்த நிலையில் நேற்று அவருக்கு அபுதாபி அரசின் கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் அமீரகத்தில் பத்து ஆண்டு வசிப்பதற்கான கோல்டன் விசா வழங்கப்பட்டது. அந்த துறையின் தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அதன் தலைவர் முகம்மது கலீபா அல் முபாரக் கோல்டன் விசாவுக்கான அமீரக அடையாள அட்டையை நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கினார்.
கோல்டன் விசாவை பெற்றுக்கொண்ட நடிகர் ரஜினிகாந்த் "அபுதாபி அரசிடம் இருந்து மதிப்புமிக்க அமீரகத்தின் கோல்டன் விசாவை பெறுவதில் நான் மிகவும் பெருமையடைகிறேன். இதனை வழங்கிய அபுதாபி அரசுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்." என ஒரு காணொளி மூலம் நன்றியை தெரிவித்திருந்தார்.
Listen News!