• Sep 20 2024

குடும்பங்கள் கொண்டாடும் லியோ..! இனி பாக்ஸ் ஆபிஸ் ரெக்கார்டுக்கெல்லாம் RIP தானா..?

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடித்துள்ள 'லியோ' திரைப்படம் தற்போது உலகளவில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

எனினும் லியோ படம் தொடர்பான பல்வேறு விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில்  முன்வைக்கப்பட்டு தான் வருகின்றது.

ஆனாலும், லியோ படம் வெளியாகிய நான்கு நாட்களுக்குள் வசூலை வாரிக்குவித்துள்ளது.


எனினும், லியோ படத்தின் ஹிந்தி வசூலும் 10 கோடியை எட்டவுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அத்துடன், உண்மையின் அடிப்படையில் இது ஒரு பெரிய எண் என குறிப்பிட்டுள்ளனர்.


இதேவேளை, லியோ திரைப்படம் உலகம் முழுவதும் 4வது நாளில் அதிகபட்சமாக 90 கோடி ரூபாய் வரை வசூல் ஈட்டியுள்ளதாகவும் 390 முதல் 395 கோடி ரூபாய் வசூலை லியோ இதுவரை பெற்றிருப்பதால் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி விடுமுறையுடன் சேர்த்து 500 கோடி வசூலை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் நாளில் அதிகாரப்பூர்வமாக வசூலை அறிவித்த தயாரிப்பு நிறுவனம் அதன் பின்னர் வசூல் கணக்கை இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement