• Sep 20 2024

முன்னாள் மனைவிக்கு எதிராக பிரபல நடிகர் தொடர்ந்த அவதூறு வழக்கு: நீதிமன்றம் அளித்த அதிரடி உத்தரவு

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி டெப் முன்னாள் மனைவிக்கு எதிராக தொடர்ந்த அவதூறு வழக்கில் அதிரடியாக தீர்ப்பு வெளியாகியுள்ளது.

மேலும் பைரேட்ஸ் ஆப் தி கரீபியன் படம் மூலம் உலகளவில் பிரபலமானவர் நடிகர் ஜானி டெப். கேப்டன் ஜாக் ஸ்பேரோ கதபாத்திரத்தின் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். மேலும் ஆலிஸ் இன் வொண்டர்லேண்ட் உள்ளிட்ட ஏகப்பட்ட ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார் ஜானி டெப்.

கடந்த 1983ம் ஆண்டு அன்னி அல்லிசன் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார் ஜானி டெப். ஆனால், அந்த திருமண வாழ்க்கை முழுமையாக இரண்டு ஆண்டுகள் கூட நீடிக்கவில்லை. இதன் பின்னர் அக்வாமேன் உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்துள்ள அம்பெர் ஹெர்ட் என்பவரை கடந்த 2015ம் ஆண்டு திருமணம் செய்த ஜானி டெப், 2017 ஆம் ஆண்டு அவரையும் விவாகரத்து செய்தார்

இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு வாஷிங்டன் போஸ்ட் என்ற பத்திரிகையில் ஆம்பர் ஹேர்ட் எழுதிய ஒரு கட்டுரை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எனினும் இதன் காரணமாக ஜானி டெப் பல திரைப்பட வாய்ப்புகளை இழந்ததாகவும் கூறப்பட்டது. இதனை தொடர்ந்து முன்னாள் மனைவி ஆம்பர் ஹேர்ட் மீது 380 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு ஜானி டெப் வழக்கு தொடர்ந்தார்.

மேலும் இந்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது ஜானி டெப்பிற்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனினும் இதன் மூலம் அவதூறு பரப்பும் வகையில் பொய்யாக குற்றச்சாட்டுகளை முன் வைத்தற்காக ஆம்பர் தனது முன்னாள் கணவர் ஜானிக்கு இழப்பீடாக 78 கோடி ரூபாயும் (10 மில்லியன்), அபராதமாக 38 கோடி ரூபாயும் ( 5 மில்லியன்) என மொத்தம் 116 கோடி ரூபாய் (15 மில்லியன்) வழங்க வேண்டுமென கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது

இதேவேளை, ஜானி டெப்பிற்கு எதிராக ஆம்பர் தொடர்ந்த 3 வழக்குகளில் 1 வழக்கில் ஆம்பருக்கு ஆதரவான தீர்ப்பு வெளியாகியுள்ளது. மேலும் இந்த வழக்கில் ஆம்பருக்கு 15 கோடி ரூபாய் (2 மில்லியன் டாலர்கள்) இழப்பீடு வழங்க கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால், ஜானி தொடர்ந்த வழக்கில் மான நஷ்ட ஈடு வழக்குகளில் அவருக்கு ஆதரவான தீர்ப்புகளே வெளியாகியுள்ளது. இதனால் ஜானி டெப் உற்சாகத்தில் உள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement