• Sep 20 2024

விக்னேஷ்சிவனுடன் பிரபல நடிகர்-வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் அஜித்குமாரை  இயக்குனர் விக்னேஷ் சிவன் சந்தித்துள்ள புகைப்படம் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் தான் நடிகர் விஜய்.இவர் நேர் கொண்ட பார்வை வலிமைக்கு பின் நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் துணிவு படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. அத்தோடு  துணிவு படத்தை  எச். வினோத் இயக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, போனி கபூர் தயாரிக்கிறார்.

மேலும் இந்த துணிவு படம் வரும் பொங்கலுக்கு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. அத்தோடு  இந்த படத்தின் சேட்டிலைட் உரிமத்தை கலைஞர் தொலைக்காட்சி சேனலும், ஓடிடி உரிமத்தை பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மேலும் இந்த படத்தின் வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.



துணிவு படத்தை அடுத்து நடிகர் அஜித்தின் 62 வது படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாக சில நாட்களுக்கு முன் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மேலும் இந்த அறிவிப்பு அஜித் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரவேற்பை பெற்றது. அத்தோடு  அனிருத் இசையில், லைக்கா சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் ஆரம்பமாகி அடுத்த ஆண்டு மத்தியில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.



இவ்வாறுஇருக்கையில் இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகர் அஜித் குமாரை துணிவு படத்தின் படப்பிடிப்பில் சந்தித்த புகைப்படம்  ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. துணிவு படத்தின் லுக்கில் நடிகர் அஜித்தும், இயக்குநர் விக்னேஷ் சிவன் கேஷூவல் லுக்கில் சிரித்த முகத்துடன் காட்சி கொடுக்கிறார்கள்.

Advertisement

Advertisement