• Sep 20 2024

மனைவி சொன்னதால் விஜய் ஹீரோயினுடன் நடிக்க மறுத்த பிரபல நடிகர்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தன் காதல் மனைவியான ட்விங்கிள் கன்னா சொன்னதால் ப்ரியங்கா சோப்ராவின் பர்சாத் படத்தில் இருந்து அக்ஷய் குமார் வெளியேறினார் என பாலிவுட் இயக்குநர் சுனீல் தர்ஷன் கூறியுள்ள விசயம் பெரும் பேசுபொருளாக அமைந்துள்ளது.

பிரபல பாலிவுட் நடிகரான அக்ஷய் குமார், ப்ரியங்கா சோப்ரா ஜோடி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஜோடியாகும். மேலும்  அவர்கள் இருவரும் சேர்ந்து அந்தாஸ், முஜ்சே ஷாதி கரோகி, ஐத்ராஸ் உள்ளிட்ட பல  படங்களில் நடித்தார்கள். இவ்வாறுஇருக்கையில்  கடந்த 2005ம் ஆண்டு வெளியான பர்சாத் படத்திலும் அக்ஷய் குமாரும், ப்ரியங்கா சோப்ராவும் தான் முதலில் கமிட்டானார்கள்.


அதாவது பர்சாத் படத்தில் பாபி தியோல், ப்ரியங்கா சோப்ரா, பிபாஷா பாசு நடித்தனர். முன்னதாக அக்ஷய் குமாரை கதாநாயகனாக ஒப்பந்தம் செய்து ஒரு பாடலை ஷூட் செய்தார்கள். அதன் பிறகு அக்ஷய் குமார் விலகவே, பாபி தியோலை ஒப்பந்தம் செய்தனர். பர்சாத் படத்தில் இருந்து அக்ஷய் குமார் திடீரென்று விலகியதற்கான காரணத்தை இயக்குநர் சுனீல் தர்ஷன் தெரிவித்துள்ளார்.

பர்சாத் பட இயக்குநர் சுனீல் தர்ஷன் கூறியதாவது, அக்ஷய் குமாரும், ப்ரியங்கா சோப்ராவும் அருமையான ஜோடி. இருவரின் குணமும் ஒத்துப் போகும். அவர்களுக்கு இடையேயான கெமிஸ்ட்ரி சிறப்பானது. நான் ஷூட் செய்த பாடல் அழகாக இருந்தது என நினைத்தேன். அது முகம் சுளிக்கும்படி இல்லை. அந்த ஷூட் முடிந்ததும் ப்ரியங்கா வேர்ல்ட் டூர் போனார். திரும்பி வந்ததும், அவருக்கும், அக்ஷய் குமாருக்கும் இடையே என்ன நடந்தது என எனக்கு தெரியவில்லை என்று கூறினார்.


சுனீல் தர்ஷன் மேலும் தெரிவித்ததாவது, ப்ரியங்கா சோப்ராவுடன் சேர்ந்து அக்ஷய் குமார் நடிப்பது அவரின் மனைவிக்கு பிடிக்கவில்லை என்பதை தெரிந்து கொண்டேன். கணவனுக்கும், மனைவிக்கும் இடையே சில பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. அத்தோடு சில சமயம் நெருக்கம், ஒருவரின் லைஃப்ஸ்டைல் ஆகியவை இடையே வர, ஒரு இயக்குநருக்கு எவ்வளவு நஷ்டம் என்பதை புரிந்து கொள்ளாமல் மீடியா அதை பெரிதுபடுத்திவிடும் என்றார்.


அத்தோடு  ப்ரியங்கா சோப்ரா மட்டும் அல்ல மேலும் சில நடிகைகளுடனும் சேர்ந்து நடிக்கக் கூடாது என அக்ஷய் குமாருக்கு கன்டிஷன் போட்டார் ட்விங்கிள் கன்னா என அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருகின்றன. சூப்பர் ஸ்டார் ராஜேஷ் கன்னாவின் மகளாக இருந்தும் அக்ஷய் குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்ட பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார் ட்விங்கிள். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவருக்கு எழுதுவது என்றால் மிகவும் பிடிக்கும்.

Advertisement

Advertisement