பாலிவுட் நடிகை கிறிசன் பெரேரா ஒரு சர்வதேச வலைத்தொடரில் நடிப்பதற்கு இவருக்கு வாய்ப்பு வந்துள்ளது.எனினும் இதையடுத்து, மும்பையில் நடைபெற்ற பல கட்ட தேர்வுகளுக்குப்பிறகு 'ஆடிஷனுக்காக' துபாய்க்கு அனுப்பப்பட்டார் கிறிசன் பெரேரா.
ஆடிஷனில் பயன்படுத்த வேண்டுமென்று அவரிடம் கூறிய கோப்பை ஒன்று, அதில் போதைப்பொருள் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். எனினும் இதையடுத்து, ஷார்ஜா விமான நிலைய போலீஸாரால் ஏப்ரல் 1ம் தேதி அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
போலீசார் மேற்கொண்ட விசாரணையில் இதில் ஐந்து பேர் சிக்கி உள்ளனர். அத்தோடு மூன்று பேர் துபாயிலிருந்து மும்பை திரும்பிய போது மும்பை போலீசாரிடம் சிக்கினர். பெரேரா உட்பட இருவர் ஷார்ஜாவில் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். அத்தோடு குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஐந்து பேருக்கும் போதை மருந்து கடத்தல் குறித்து எதுவுமே தெரியவில்லை அவர்கள் ஏமாற்றப்பட்டு பலியாகியிருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
போதை பொருள் வழக்கில் தொடர்புடைய அந்தோணி பால் மற்றும் ரவி என்பதை அடையாளம் கண்டு அவர்களிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பாலிவுட் நடிகை கிறிசன் பெரேராவின் தாயாருக்கும் அந்தோணி பாலுக்கும் நாய் வளர்ப்பதில் ஏற்கனவே தகராறு நடந்துள்ளது. எனினும் இதற்கு பழிவாங்க நினைத்த பால், ரவியை பயன்படுத்தி தனது கிறிசன் பெரேராவிற்கு தெரியாமல் கோப்பையில் போதை பொருளை வைத்துள்ளது தெரியவந்துள்ளது.
கைது செய்ப்பட்ட பாலிவுட் நடிகை மீது மோசடி, இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்தல், போதை மருந்துகள் கையாண்டது ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த விவகாரம் விசாரணையில் உள்ளதாகவும் காவல்துறை இணை ஆணையர் லக்மி கவுதம் குறிப்பிட்டுள்ளார்.
Listen News!