• Sep 20 2024

சந்திரமுகி 2 வில் இணைந்த பிரபல நடிகை-யார் தெரியுமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த 2005ல் வெளியாகி பிளாக் பாஸ்டர் வெற்றி பெற்ற திரைப்படம் தான் சந்திரமுகி.இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு, பிரபு உள்ளிட்ட பிரபலங்கள் பலர் நடித்திருந்தனர். இப்படத்தை பி.வாசு இயக்கியிருந்தார்.

மனநல பிறழ்வால் பாதிக்கப்பட்ட தன்னுடைய நண்பனின் மனைவியை அதிலிருந்து மிகவும் புத்திசாலித்தனமாக அவர் காப்பாற்றுவதாக கதைக்களம் காணப்பட்டது. இந்தப் படம் வெளியாகி 18 ஆண்டுகளை கடந்த நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.

லைக்கா தயாரிக்கவுள்ள இப்படத்தில் ரஜினிக்கு பதில் லாரன்ஸ் இணைந்துள்ளார்.

மேலும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு நடிகர் லாரன்ஸ் தனது குருவான நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பு மைசூரில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் பாகத்தில் நடித்த வடிவேலுவை தவிர மற்ற எல்லாமே இந்த இரண்டாம் பாகத்துக்கு புதியவர்கள் தான்.

இந்தப்படத்தில் கதாநாயகியாக லட்சுமி மேனன் நடிக்கிறார் என்று சொல்லப்பட்டு வரும் நிலையில், இந்த படத்தில் மொத்தம் ஐந்து கதாநாயகிகள் நடிக்கின்றனர் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அதில் நடிகை மகிமா நம்பியார் ஒருவர் என்பதும் தற்போது நடைபெற்று வரும் இந்தப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு அவர் நடித்து வருகிறார் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement