பாலிவுட் சினிமாவின் முக்கிய நடிகையாகக் கொண்டாடப்படுபவர் நடிகை பிரியங்கா சோப்ரா. முன்னாள் உலக அழகியான இவர் 2000-ஆம் ஆண்டில் 'உலக அழகிப் பட்டம்' பெற்றுப் பிரபலமானார். இதன் பின்னர் மாடலிங்கில் கால் பதித்தார். மாடலிங்கில் தனது திறமையை வெளிப்படுத்திய இவருக்கு சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.
2002 இல் வெளியான 'தமிழன்' திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். சினிமாவில் அறிமுகமாகிய இவர் தொடர்ந்து 2003 இல் அணில் ஷர்மாவின் இயக்கத்தில் வெளியான 'தி ஹீரோ - லவ் ஸ்டோரி ஆஃப் எ ஸ்பை' என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பாலிவுட் சினிமாவில் கால் பதித்தார்.
இவரது நடிப்பில் வெளியாகிய ஏனைய படங்களாக 'ஆண்டாஸ், அசம்பவ், முஜ்சே ஷாதி கரோகி, ஐத்ராஸ்,ப்ளாக்மைல்' போன்ற படங்களை குறிப்பிடலாம். இது தவிர வேறு சில படங்களிலும் இவர் நடித்துள்ளார். நடிப்பில் தனது திறமையை வெளிப்படுத்திய இவர் பல விருதுகளை வென்றார்.
2003 இல் வெளியான 'ஆண்டர்சன்' திரைப்படத்தில் நடித்து சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியமைக்காக பிலிம்பேரின் சிறந்த பெண் அறிமுக விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டார். அதுமட்டுமல்லாது மேலும் பல பிலிம்பேர் விருதுகளையும் இவர் வென்றெடுத்துள்ளார்.
சினிமாவில் தனது திறமையை வெளிப்படுத்திய பிரியங்கா 2018 இல் நிக் ஜொனாஸ் என்ற அமெரிக்கப் பாடகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் 2022 இல் நிக் ஜொனாஸ் மற்றும் பிரியங்கா சோப்ரா தம்பதியினர் வாடகைத் தாய் மூலம் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தனர்.
அக்குழந்தைக்கு 'மால்தி' எனப் பெயரிட்டனர். இவ்விடயம் நிக் ஜொனாஸ் மற்றும் பிரியங்கா சோப்ராவின் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இவர்கள் இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுக்க தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏனெனில் நிக் ஜொனாஸ் தம்பதியினர் விரும்புவது என்னவெனில் 'தமது மகள் மால்தி கட்டாயம் சகோதர சகோதரிகளுடன் சேர்ந்து வளரவேண்டும் என்றும் சசோதர சகோதரிகளே வாழ்க்கையின் முக்கிய பகுதி என்றும் கருதுகின்றனர்.
மேலும் நிக் தனது குழந்தைகள் வயதில் நெருக்கமாக இருப்பதையும் அவரது சகோதரர்களான ஜோ மற்றும் கெவின் குழந்தைகளுடன் இருப்பதையும் உறுதிப்படுத்த விரும்புவதாக கூறப்படுகிறது. எனவே இவர்கள் தமது இரண்டாவது குழந்தையை வரவேற்கத் தயாராகும் விடயம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது.
பிற செய்திகள்
- இவங்க தான் நம்ம பிக்பாஸ் வீட்டின் சவுண்ட் பார்ட்டி…சிறுவயதிலே எப்படி இருந்தாங்க…இப்போ இப்படி இருக்காங்களே..!
- கவர்ச்சி வீடியோ வெளியிட்டு குழந்தை ரியாக்சன் கொடுத்த ஸ்ருதி…வைரலாகும் வீடியோ..!
- லட்சுமி மேனனுக்கா இந்த நிலைமை..?என்னம்மா இப்பிடி மாறிட்டீங்களே..!
- ஆத்திரமடைந்த சந்தானத்தின் ரசிகர்கள்…இடையில் நிறுத்தப்பட்ட படம்…காரணம் என்ன தெரியுமா..?
- பேய் சிரிப்பு சிரித்த மணிமேகலை…வேப்பிலை அடிக்கணும் எனக்கூறிய உசைன்…வைரலாகும் வீடியோ..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!