தற்போதைய காலகட்டத்தில் சினிமாவில் இடம்பெறும் பல கிசுகிசு செய்திகளையும் நட்சத்திரங்களில் அந்தரங்க செய்திகளை புட்டுபுட்டு வைத்து வருபவர் நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன்.
சமீபகாலமாக நடிகைகளை பற்றி அவதூறாக பேசியும் அசிங்கப்படுத்தியும் பேசி வருவதை பலர் கண்டித்து கருத்துக்களை கூறிவருகிறார்கள்.அப்படி இருந்தும் அதனை பொருட்படுத்தாது தன்னுடைய கருத்துக்களை கூறி வருகிறார் பயில்வான். அந்தவரிசையில் நடிகை ஓவியா, கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன் பற்றி கேவளமாக பேசியதாக நடிகைகள் கண்டனம் தெரிவித்து கருத்துக்களை வெளியிட்டிருந்தார்கள்.
சமீபத்தில் நடிகை வாணி போஜன் ஜெய்யுடன் ஒரே வீட்டில் லிவ்விங் டு கெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்ததாகவும் வாய்ப்புகளும் மார்க்கெட்டும் இதனால் பறிபோவதால் பிரிந்துவிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
அவர்களை தொடர்ந்து நடிகை மடோனா செபாஸ்டியனும் திருமணமாக நடிகருடன் லிவ்விங் டு கெதர் வாழ்க்கையில் இருப்பதாக சொல்லியுள்ளார்.
பிரேமம், பவர் பாண்டி, கவண், காதலும் கடந்து போகும் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார் மடோனா செபாஸ்டின்.
எனினும் தற்போது வாய்ப்பில்லாத நிலையில் பிரபல திருமணமான நடிகருடன் உறவில் இருப்பதாகவும் அவர் எது சொன்னாலும் அதை கேட்டு வருவதாகவும் கூறியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.
இதேபோல் பல நடிகைகள் லிவ்விங் டு கெதர் வாழ்க்கையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
Listen News!