தமிழ் சினிமாவில் உள்ள இளம் நடிகர்களில் முக்கியமானவர் தான் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகிய டாக்டர் திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து டான் என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.
மேலும் டான் படத்தின் ட்ரெய்லரும் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றிருக்கின்றது. அத்தோடு இப்படத்தின் வரவுக்காக ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.மேலும் சிவகார்த்திகேயன் தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் புதிய படத்தில் ஒப்பந்தமாகி இருப்பதாக அறிவிப்பு வெளியானது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன்-5ன் ஃபைனல்ஸில் இப்படக்குழு நிகழ்ச்சியில் பங்கேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. ஏற்கனவே சிவகார்த்திகேயன் ராஜ்குமார் பெரியசாமியுடன் இணைந்து சில பிராஜெக்டுகளை செய்துள்ளார்.
இந்நிலையில் புதுப்படம் ஒன்றில் சிவகார்த்திகேயனுக்குஜோடியாக சாய்பல்லவி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. திரையுலகில் திறமையான கதாநாயகியாக வலம்வருபவர்களுள் சாய்பல்லவி. சமீபத்தில் இவர் நடித்த NGK, ஷ்யாம் சிங்க ராய் போன்ற படங்களில் இவரது திறமையான நடிப்பு பாராட்டைப் பெற்றது. அத்தோடு OTTல் வெளியான 'பாவக் கதைகள்' சீரிஸின் ஒரு தொகுப்பில் இவரது கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்தது.
இதையடுத்து கமல்ஹாசன் தயாரிக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி இணைந்து நடிக்க உள்ளனர். சோனி நிறுவனம் முதலீடு செய்ய கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகின்றது. இந்தப் படம் முழுநீள ஆக்ஷன் எண்டெர்டெயினராக உருவாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் தற்போது இன்று மாலை முக்கிய அப்டேட் வெளியாக இருப்பதாக ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் குறிப்பிட்டுள்ளார். இன்று சாய் பல்லவி தனது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார். எனவே சாய் பல்லவி இந்தப் படத்தின் கதாநாயகி என்ற அறிவிப்பு தான் இன்று மாலைவெளியாகும் என்று கோலிவுட் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
https://twitter.com/rameshlaus/status/1523645890396782592?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1523645890396782592%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fcineulagam.com%2Farticle%2Fsai-pallavi-gone-to-pair-up-with-sivakarthikeyan-1652103634
Listen News!