1997-இல் ரட்சகன் என்ற திரைப்படத்தில் நடிகர் நாகார்ஜுனா அவருக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இந்தி நடிகை சுஷ்மிதா சென். இவர் 1994ஆம் ஆண்டு பிரபஞ்ச அழகி என்ற பட்டம் பெற்ற இந்திய பெண் ஆவார். இவர் 90s காலத்தில் மிகப் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர்.
தொடர்ந்து பல படங்களில் நடித்த நடிகை சுஷ்மிதா சென் திருமணம் செய்யாமலேயே இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகின்றார். இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய சுஷ்மிதா சென்.
அதிர்ஷ்டவசமாக எனது வாழ்வில் நான் சில சுவாரஸ்யமான ஆண்களை சந்தித்து உள்ளேன். ஆனால் அவர்களால் நான் ஏமாற்றமடைந்தேன். அந்த காரணத்தால் நான் திருமணம் செய்து கொள்ளவில்லை. எனது குழந்தைகளுக்கு இது துளி அளவும் தொடர்பு இல்லை. என் வாழ்விலிருந்த நபர்களை எனது குழந்தைகள் இருவரும் மனதாக ஏற்றுக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு மரியாதையும் அன்பையும் அளித்துள்ளனர். அதைப் பார்க்கவே மிகவும் அழகாக இருக்கும்.
மூன்று முறை நான் திருமணம் செய்து கொள்ளும் சூழல் என் வாழ்விலே உருவானது. ஆனால் கடவுள் என்னை காத்தார் என்று தான் சொல்லவேண்டும். அவர்களுடன் நான் சந்தித்த சிக்கல்களை என்னால் சொல்ல முடியாது. எனது குழந்தைகளையும் கடவுள்தான் காத்து வருகின்றார் என தெரிவித்துள்ளார் நடிகை சுஷ்மிதா.
பிற செய்திகள்
- உடலில் துணியே இல்லாமல் விஜய் தேவரகொண்டா…வைரலாகும் போஸ்டர்..!
- 44 வயதில் கம்பேக்கா-ரசிகரின் கேள்விக்கு நச் என பதிலளித்த நடிகை பூஜா
- நடிகை கீர்த்தி சுரேஷிற்கு விரைவில் திருமணமா? பெற்றோர் அளித்த பதில்
- ஹிப் ஹாப் ஆதியின் மனைவியை பார்த்துள்ளீர்களா…? இதோ புகைப்படம்…!
- திருமணத்திற்கு பிறகு ஷாருக்கானுடன் ‘அந்த’ காட்சியில் நடிக்கும் நயன்தாரா…வைரலாகும் தகவல்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!