ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இருந்து நடிகை அர்ச்சனா விலகியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் பிறந்த நடிகை அர்ச்சனா 1980 ஆம் ஆண்டு தைப்பொங்கல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து காதல் ஓவியம், ரெட்டை வால் குருவி, வீடு, சந்தியா ராகம் என பல படங்களில் ஹீரோயினாக நடித்தார். 1991 ஆம் ஆண்டுக்கு பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்திய அர்ச்சனா மீண்டும் 2007 ஆம் ஆண்டு தனுஷ் நடித்த பரட்டை என்கிற அழகு சுந்தரம் படத்தின் மூலம் ரீ- எண்ட்ரீ கொடுத்தார்.மேலும் இந்த படத்தில் அவர் நடிகர் தனுஷின் அம்மாவாக நடித்திருந்தார்.
இதன்பின்னர் ஒன்பது ரூபாய் நோட்டு, சீதக்காதி, நம்ம வீட்டு பிள்ளை, அழியாத கோலங்கள் 2 என பல படங்களில் நடித்துள்ளார். அத்தோடு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பெங்காலி என பல மொழி படங்களில் நடித்துள்ள அர்ச்சனா ஜீ தமிழில் ஒளிபரப்பான மீனாட்சி பொண்ணுங்க என்னும் சீரியலில் நடித்து வந்தார்.
அத்தோடு இந்த சீரியல் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் முதல் ஒளிபரப்பாகி வருகின்றது. இதில் கணவரை பிரிந்த 3 பெண் குழந்தைகளின் அம்மாவாக நடித்து வந்தார்.எனினும் இதனிடையே கடந்த சில நாட்களாக அர்ச்சனா இந்த சீரியலில் இருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியானது. இதனால் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர்.
மேலும் இதுதொடர்பாக ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள அர்ச்சனா, கன்னடத்தில் வெளியான புட்டகன்ன மக்களு என்ற சீரியலின் தமிழ் வெர்ஷன் தான் தமிழில் ஜீ தமிழில் மீனாட்சி பொண்ணுங்க என்ற பெயரில் ஒளிபரப்பானது. கன்னடத்தில் செம ஹிட்டான இந்த சீரியல் பற்றியும், அந்த அம்மா கேரக்டர் பற்றியும் எனக்கு பிடித்திருந்ததால் தான் நான் இந்த சீரியலில் நடிக்க ஒப்புக் கொண்டேன்.
ஆனால் கதையின் நகர்வு எனக்கு அதிருப்தியை உண்டாக்கியது. பிடிக்காத ஒரு ப்ராஜெக்ட்ல எப்படி வேலை பார்க்க முடியும். பிடிச்ச வேலையை செய்யறது தானே நல்லது. அதனால் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இருந்து விலகி விட்டேன் என கூறியுள்ளார். முதலில் தான் விலகவுள்ளதாக சேனல் தரப்பிடம் அர்ச்சனா தெரிவித்த நிலையில், பல்வேறு காரணங்களை சொல்லி சேனல் தரப்பு சமாதானம் செய்ததாக சொல்லப்படுகிறது. அர்ச்சனா விலகியது அந்த சீரியல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!