இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி சமீபத்தில் தனது திரைப்பட தயாரிப்பு நிறுவனமான தோனி என்டர்டெயின்மென்ட் மூலம் முதல் தமிழ் திரைப்படத்தை தயாரிப்பதாக தெரிவித்து இருந்தார்.
ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் இவானா மற்றும் ஹரிஷ் கல்யாண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.மேலும் இந்த படத்துக்கு ‘Lets get married’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தோனி என்டர்டெயின்மென்ட்டின் முதல் தயாரிப்பான ‘Lets Get Married’ டைட்டில் லுக் மோஷன் போஸ்டரும் வெளியிடப்பட்டது.
அத்தோடு இந்த திரைப்படத்தில் நதியா மற்றும் யோகி பாபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக அறிவித்திருந்தது. எனினும் தற்போது, மங்களகரமான பூஜையுடன் இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பில் ஈடுபட்டிருக்கும் நடிகை நதியா மற்றும் யோகி பாபு ஆகியோர் ஒன்றாக இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இது ஒரு காதல் நகைச்சுவை திரைப்படம் என்று கூறப்படுகிறது. விஸ்வஜித் சி.டி இசையமைக்க, எடிட்டராக பிரதீப் இ ராகவ் ஆகியோர் தொழில்நுட்ப குழுவில் உள்ளனர். தமிழ் சினிமாவில் தல தோனி தயாரிப்பாளராக கால்பதிக்கும் இந்த படதுக்கு மிகுந்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Listen News!